"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கொடுமணல் தொல்லியல் களம்''' இன்றைய [[கொடுமணல்]] என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், [[காவிரி|காவிரி ஆற்றில்]] கலக்கும்[[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] வட கரையில், [[ஈரோடு]] நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது.<ref name="Stone spell">{{cite news|last=|title=Stone spell|url=http://www.hindu.com/mp/2005/03/19/stories/2005031902020100.htm|accessdate=|newspaper=The Hindu|date=19 March 2005|location=India}}</ref> இதன் அமைவிடம், சங்ககாலச் [[சேர நாடு|சேர நாட்டின்]] தலைநகரமான [[கரூர்|கரூரை]], மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் [[பதிற்றுப்பத்து]] என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில [[நூற்றாண்டு]]களில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] காணப்படுகின்றன.
 
கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி [[புதைகுழிகள்]] அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.<ref name="Stone spell" />
 
இக்களம் 1961 ஆம் ஆண்டில் [[புலவர் இராசு]], செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.
 
==தொன்மையான தொழில் நகரம்==
கொடுமணல் சங்க இலக்கியத்தில் "[[கொடுமணம்]]" என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமை மிக்க கைவினைக் கலைஞர் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு, உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.<ref>[http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/2000616d_17.pdf Indian Journal of History & Science,37.1,2002,17-29 (through "Digital Library of India")]</ref><ref>[http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b66_263.pdf Indian Journal of History & Science,34(4),1999 (through "Digital Library of India")]</ref>
 
அதுபோலவே, கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், [[வைடூரியம்]], நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
 
சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது.
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864968" இருந்து மீள்விக்கப்பட்டது