"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கொடுமணல் தொல்லியல் களம்''' இன்றைய [[கொடுமணல்]] என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், [[காவிரி|காவிரி ஆற்றில்]] கலக்கும்[[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] வட கரையில், [[ஈரோடு]] நகரிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது.<ref name="Stone spell">{{cite news|last=|title=Stone spell|url=http://www.hindu.com/mp/2005/03/19/stories/2005031902020100.htm|accessdate=|newspaper=The Hindu|date=19 March 2005|location=India}}</ref> இதன் அமைவிடம், சங்ககாலச் [[சேர நாடு|சேர நாட்டின்]] தலைநகரமான [[கரூர்|கரூரை]], மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் [[பதிற்றுப்பத்து]] என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில [[நூற்றாண்டு]]களில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] காணப்படுகின்றன.
 
கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி [[புதைகுழிகள்புதைகுழி]]கள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.<ref name="Stone spell" />
 
இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் [[செ.இராசு]], செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864972" இருந்து மீள்விக்கப்பட்டது