திருச்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 67:
இது கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.
 
ஆண்டுதோறும் மேமாதம் சித்திரை பூர நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன. மேலும் திருச்சூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலான குருவாயூர் உள்ளது. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற கொடுங்கல்லுர் பகவதி கோயில் உள்ளது மற்றும் 23 கிலோமீட்டர் தொலைவில் திருப்பராயர் எனப்படும் இடத்தில் பிரசித்திபெற்ற இராமர் கோயில் உள்ளது. இந்தியாவின் நயகாரா என அழைக்கப்படும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியும் இங்குதான் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது