"தாமசு ஆல்வா எடிசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''தொமஸ் அல்வா எடிசன்''' ([[பெப்ரவரி 11]], [[1847]] – [[அக்டோபர் 18]], [[1931]]) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். "[[மென்லோ பூங்கா, நியூ ஜேர்சி|மென்லோ பூங்காவின்]] மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் [[அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகம்|அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின்]] (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.
 
 
தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உண்டுபண்ணப்பட்டவை அல்ல, முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] மற்றும் [[ஜெர்மனி]] உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான [[அசையும் பட உரிமக் கம்பனி|அசையும் பட உரிமக் கம்பனியை]](Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
 
[[பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:இலத்திரனியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/18673" இருந்து மீள்விக்கப்பட்டது