பயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
32,192
தொகுப்புகள்
(" '''பாயிரம்''' என்பதற்கு ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
'''[[பாயிரம்]]''' என்பதற்கு [[வரலாறு]] என்பது பொருள். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது [[பதிகம்]]. இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது<ref>வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன [[ஐங்குறுநூறு]] [[மருதத்திணை]]யில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.</ref>. இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு பத்து என்றே குறிப்பிடுகிறது <ref>10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் பெரியாழ்வார் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.</ref>.தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்<ref>கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருள்ளாறு பதிகம்.</ref>.பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின<ref>[[பாய்ச்சலூர்ப் பதிகம்]], [[மயிலாப்பூர் பத்தும் பதிகம்]],</ref>.பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்<ref>[[பன்னிரு பாட்டியல்]] நூற்பா 312.</ref>
'''”முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
'''புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்”''' - [[நன்னூல்]]- 1
* [[பொதுப் பாயிரம்]]▼
முகவுரை, பதிகம் என்பவை பாயிரத்துக்கு உரிய வேறு பெயர்களாகும். நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவித்து விளக்குவது அணிந்துரை எனப்படும். நூலைப்பற்றி புனைந்து கூறுவது புனைந்துரை ஆகும். புறவுரை என்பது அந்நூலில் கூறப்படாதப் பொருளைப்பற்றி கூறுவது என்றும் தந்துரை என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
== அடிக்குறிப்புகள் ==
{{ reflist}}
==இவற்றையும் காண்க==
* [[சிற்றிலக்கிய வகை]]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு]
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D நன்னூல் (மூலம்)]
{{நன்னூல்}}
|