"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''கொடுமணல் தொல்லியல் களம்''' இன்றைய [[கொடுமணல்]] என்னும் சிற்றூரில் இருந்து ஒன்றரைக் [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், [[காவிரி|காவிரி ஆற்றில்]] கலக்கும்[[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] வட கரையில், [[சென்னிமலை]] நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்திலும், [[ஊத்துக்குளி]] நகரிலிருந்து சுமார் 10 கிமீ தூரத்தில்தூரத்திலும் உள்ளது.<ref name="Stone spell">{{cite news|last=|title=Stone spell|url=http://www.hindu.com/mp/2005/03/19/stories/2005031902020100.htm|accessdate=|newspaper=The Hindu|date=19 March 2005|location=India}}</ref> இதன் அமைவிடம், சங்ககாலச் [[சேர நாடு|சேர நாட்டின்]] தலைநகரமான [[கரூர்|கரூரை]], மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் [[பதிற்றுப்பத்து]] என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில [[நூற்றாண்டு]]களில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] காணப்படுகின்றன.
 
கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி [[புதைகுழி]]கள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.<ref name="Stone spell" />
743

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1868656" இருந்து மீள்விக்கப்பட்டது