மார்த்தாண்ட வர்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
<center>''இந்த கட்டுரை ஒரு திருவிதாங்கூர் அரசரை பற்றியாகும், மற்ற தகவல்களுக்கு [[மார்த்தாண்ட வர்மா]] என்ற பக்கம் பார்க்கவுமபார்க்கவும்.''</center><br />
'''மார்த்தாண்ட வர்மர்''' (1706 - 1758) [[திருவிதாங்கூர்]] அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் [[அட்டிங்கல்]] இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான [[ராஜா ராம வர்மர்|ராஜா ராம வர்மரிடம்]] இருந்து இவருக்குக் கிடைத்தது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்ட வர்மர், முடிக்குரிய இளவரசராக இருந்தபோதே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யாருடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.
 
==அரச பதவி==
 
[[Image:marthandan.jpg|thumbnail|மார்த்தாண்ட வர்மர்]]
ராஜா ராம வர்மரின் பிள்ளைகளும், குஞ்சுத் தம்பிமார் என அழைக்கப்பட்ட, பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி ஆகியோரும் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்ற பிரபுக்களோடு சேர்ந்துகொண்டு மார்த்தாண்ட வர்மரைக் கொல்லச் சதி செய்தனர். இதனால் இவர் தலைநகரமான [[பத்மநாபபுரம்|பத்மநாபபுரத்தில்]] இருந்து தப்பியோடித் திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்தார். அங்கே மக்களுடைய ஆதரவு இவருக்குக் கிடைத்தது. அனந்தபத்மநாபன் என்பவன் தலைமையில் ஒரு படையைத் திரட்டிச் சென்று தனது எதிரிகளை வென்ற மார்த்தாண்ட வர்மர் 1729 ஆம் ஆண்டில் அரசனானார்.
 
==அரசு விரிவாக்கம்==
 
வலுவுள்ள படையொன்றைத் திரட்டிய மார்த்தாண்ட வர்மர் அயல் நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வேணாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவற்றுள் பல டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியாரின் கூட்டாளிகளாக இருந்தனர். இதனால் டச்சுக் கம்பனியார் மார்த்தாண்ட வர்மர்மீது போர் தொடுத்தனர். 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[குளச்சல் போர்|குளச்சல் போரில்]] டச்சுக்காரர் தோல்வியைத் தழுவினர். டச்சுத் தளபதியான [[யுஸ்ட்டாக்கியஸ் டி லனோய்]] (Eustachius De Lannoy) பிடிபட்டான். மார்த்தண்ட வர்மருடைய படையில் சேர்ந்து வீரர்களுக்கு நவீன போர்முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவன் கொல்லாமல் விடப்பட்டான்.
 
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்ட_வர்மர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது