அப்பைய தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''அப்பைய தீட்சிதர்''' (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த [[அத்வைதம் |அத்வைத]] வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் [[இலக்கியம்|இலக்கியத்திலும்]] வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் [[காசி]] வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான [[கர்ம யோகம்|கருமம்]], [[பக்தி யோகம்|பக்தி]], [[ஆத்ம ஞானம்]] இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.
 
==பிறப்பும் இளமைக்காலமும்==
அப்பைய தீட்சிதரின் வேதாந்த நூல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ''சித்தாந்த-லேச-சங்கிரகம்'' என்ற அவருடைய சொந்தப் படைப்பு. இப்பெரிய நூலில் அத்வைத சித்தாந்தத்தின் எல்லா நெளிவு சுளுவுகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருகிறார். பாஷ்யங்களைப் படிக்கத் தொடங்கும் அத்வைத மாணவர்கள் யாவரும் இன்று இந்நூலில் தான் தொடங்குவார்கள். அத்வைதத்தினுள்ளே இருக்கும் பல பிரிவுகளின் கொள்கைகளும் இதனில் அலசப்பட்டு விடுகின்றன. ஏக-ஜீவ-வாதம், நாநாஜீவ-வாதம், பிம்பப் பிரதிபிம்பவாதம், ஸாக்ஷித்துவ-வாதம் முதலிய எல்லாமே விவரிக்கப்பட்டு அவைகளின் எதிர்வாதங்களும் தீட்சிதரின் அறிவுச் சாணையில் தீட்டப்பட்டு விடுகின்றன. அகிலமும் சம்மதம் என்பது போல் அவரே அந்த பரந்த நோக்கை நியாயப்படுத்தி விடுகிறார்: “உலகெல்லாம் மாயை என்பதை எல்லா அத்வைதிகளும் ஒப்புக்கொள்வதால், அம்மாய உலகத்திற்கு இவர்கள் வெவ்வேறு படங்கள் வரைவதினால் என்ன குறை வந்துவிடப் போகிறது?”
 
==''பரிமளம்''==
 
[[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரின்]] பிரம்மசூத்திர[[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திர]] பாஷ்யத்திற்கு [[வாசஸ்பதி மிசிரர்மிஸ்ரர்]] இயற்றிய ‘[[பாமதி]]’ என்ற உரை மிகவும் மதிக்கத் தக்கது. அதற்கு அமலானந்தர் என்பவர் ''கல்பதரு'' என்ற ஓர் நிரடலான உரை எழுதினார். இந்த கல்பதருவை எளிதாகப் புரிந்துகொள்ளும் முறையில் அப்பைய தீட்சிதர் எழுதிய ''பரிமளம்'' என்ற உரை பல்வேறு ஐயங்களை ஒருவாறு மிதப்படுத்தியது. மனிதனுடைய [[அக்ஞானம்|அஞ்ஞானம்]], [[பிரம்மம்|பிரம்மபிரம்மத்திலிருந்து]]த்திலிருந்து வந்ததா அல்லது [[ஜீவாத்மா|ஜீவனிடமிருந்து]] வந்ததா என்பது அத்வைதத்தின் சிடுக்கான பிரச்சினை. இதற்கு ‘பாமதி’‘[[பாமதி]]’ உரையில் கொடுக்கப்பட்ட விளக்கமும், [[அத்துவிதம்|அத்வைதத்தின்]] இன்னொரு பிரிவான [[விவரணப்]] பிரிவில் கொடுக்கும் விளக்கமும் இரண்டையும் கருத்தில் கொண்டு அப்பைய தீட்சிதர் இரண்டு விளக்கமும் சம்மதமே என்ற முறையில் அவருடைய ''சித்தாந்த லேச சங்கிரகம்'' விளக்கியிருந்ததால், அவரது ''பரிமளம்'' பரிமளித்தது.
 
==''சிவார்க்கமணி தீபிகை''==
==அத்வைதமும் மற்ற வேதாந்தப்பிரிவுகளும்==
 
வைணவ எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக அவர் முழு மூச்சுடன் பலஆண்டுகள் நாடெங்கும் சென்று பேசியும் எழுதியும் உழைத்தார். பல அரசர்கள் – குறிப்பாக, [[தஞ்சை]], [[வெங்கடகிரி]], வேலூர், [[விஜயநகரம்]] மன்னர்கள் – அவருக்கு உதவி செய்தார்கள். தீட்சிதருடைய கணிப்பில் [[துவைதம்]] முதல் படி. [[விசிஷ்டாத்வைதம்]] அதற்கு அடுத்த மேல் படி. சிவாத்வைதமும் [[அத்துவிதம்|அத்வைதமும்]] கிட்டத்தட்ட ஒன்றாக அதற்கடுத்த கடைசிப்படி. சிவாத்வைதத்தை அடிப்படையாக வைத்து சூத்திரங்களுக்கு பாஷ்யம் எழுதிய ஸ்ரீகண்டர் ஆதி சங்கரருடைய கருத்துகளுக்கு இணையாக இருக்கும்படிதான் எழுதியிருக்கிறர் என்பது தீட்சிதருடைய முடிவு. குணங்களுடன் கூடிய பரமனை உபாசிப்பது குணங்களற்ற பரம்பொருளில் தான் கொண்டுவிடும். இதை நிலைநாட்டும் முறையில் ''ஆனந்தலஹரி சந்திரிகா'' என்ற நூலில் பற்பல வித்தியாசமான தத்துவங்களும் கடைசியில் சுத்தாத்வைதத்தை அணுகித்தான் முடியும் என்று நிறுவுகிறார்.
 
==பெரிய யோகி==
தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, அவர் ஒரு துண்டின்மேல் அந்த வலியை தன் மந்திர வலுவால் ஈர்த்து வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அப்பொழுது அத்துண்டு இப்படியும் அப்படியும் குதித்துக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் திரும்ப அந்த வலியை வாங்கிக் கொள்வாராம். [[தொல்வினை]]யை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதை நம்பினவர் அவர்.
 
==''ஆத்மார்ப்பண ஸ்துதி''==
 
''ஆத்மார்ப்பண ஸ்துதி'' அவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதை அவர் இயற்றிய விதம் வெகு விந்தையானது. ஆண்டவனிடம் தன்னுடைய பக்தி உண்மையானது தானா என்று தன்னையே பரிசோதனைக்குட்படுத்திக் கொள்கிறார். மயக்க நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு பழத்தைச் சாப்பிட்டு தான் மயக்கத்தில் சொல்வதை எல்லாம் அப்படியே எழுதி வைக்கும்படி தன் சிஷ்யர்களிடம் சொல்லிவைத்து, அந்த மயக்கத்தில் அவர் ‘உளறினது’ தான் 50 சுலோகங்கள் கொண்ட ''ஆத்மார்ப்பண ஸ்துதி''.
 
==துணை நூல்கள்==
* N. Ramesan, Sri Appayya Dikshita 1972; Srimad Appayya Dikshitendra Granthavaliu Prakashana Samithi, Hyderabad, India
 
* {{cite journal
| quotes =
| author = Sheldon Pollock
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1869059" இருந்து மீள்விக்கப்பட்டது