"யோவான் நற்செய்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறித்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் [[அன்புச்சீடர்]] (21:24) <ref>[http://en.wikipedia.org/wiki/Beloved_Disciple அன்புச்சீடர்]</ref> இவராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் [[இயேசு கிறித்து|இயேசுவைப்]] பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனிவடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் [[கிறித்தவம்|கிறித்தவச் சமூகத்தின்]] தேவைகளுக்கு ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்க வேண்டும்.
 
எவ்வாறாயினும், ஓரு யூத-கிறிஸ்தவர் இந்நூலை எழுதியிருக்கவேண்டும். ஏற்கெனவேஏற்கனவே உருவாகியிருந்த ஒரு சிறப்பு மரபுக்கு இவர் எழுத்துவடிவம் கொடுத்திருக்க வேண்டும். இந்தச் சிறப்பு மரபுக்கு ''யோவான் தனிமுறை மரபுக்குழு'' அல்லது ''யோவான் குழு'' (Johannine School) என அறிஞர் பெயரளித்துள்ளனர். இந்த யோவான் குழுவுக்கும் செபதேயுவின் மகன் யோவானுக்கும் அல்லது அன்புச் சீடருக்கும் இடையே வரலாற்றுத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும்.
 
இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1:35:39). இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த மூன்று [[திருத்தூதர்|திருத்தூதருள்]] இவரும் ஒருவர் (மார் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இரா உணவின்போது இயேசுவின் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு [[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னையை]] ஒப்படைத்தார் (19:25-27).
யோவான் குழுவினரிடையே உருவாகிப் புழக்கத்தில் இருந்த மரபுகளை நூலாசிரியர் பயன்படுத்தினார். அம்மூல ஆதாரங்களிலிருந்து யோவான் 1:1-18 பாயிரப் பகுதியை உருவாக்கினார் (யோவா 1:1-18) அது ஒரு முன்னுரைப் பாடலாக உள்ளது. இயேசுவைக் கடவுளின் வாக்கு எனப் பாடும் பாடல் அது. அதுபோல, இயேசு புரிந்த ''அரும் அடையாளங்களா''க (signs) யோவான் ஏழு வியப்புறு செய்திகளாகிய புதுமைகளைப் பதிவுசெய்துள்ளார். இவையும் ஒரு சமயத்தில் ஒரு தனித்தொகுப்பாக இருந்திருக்க வேண்டும்.
 
அதுபோலவே, அதிகாரங்கள் 13-17இல் காணப்படுகின்ற பிரியாவிடை உரைகளில் காணப்படும் சில கருத்துத் தொடர்கள் ஏற்கெனவேஏற்கனவே இருந்த உரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். அதிகாரங்கள் 18-19 இயேசுவின் பாடுகளைப் பற்றிய கூற்றுத்தொடர்களைக் கொண்டிருக்கின்றன. இப்பகுதிக்கும் ஒத்தமை நற்செய்திகள் தருகின்ற பாடுகள் பகுதிக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. யோவான் சில வரலாற்றுத் தகவல்களையும் தருகிறார். நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் ஒத்தமை நற்செய்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாரா, அவற்றைப் பயன்படுத்தினாரா என்பது பற்றி உறுதியாக ஒன்றும் கூற இயலவில்லை என்பர் விவிலிய அறிஞர்.
 
== யோவான் நற்செய்தி நூலின் பகுதிகளும் விளக்கமும் ==
* '''இயேசுவின் பிரியாவிடை உரைகள்'''
 
இயேசு வழங்கிய வெவ்வேறு பிரியாவிடை உரைகள் இயேசு ஏற்கெனவேஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த திருச்சபை என்னும் இயக்கம் அவரது மண்ணக வாழ்வுக்குப் பின் எவ்வாறு தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதை விவரிப்பனவாக அமைந்துள்ளன. கடவுள் மீது நம்பிக்கை வைத்தல், அக்கடவுளை வெளிப்படுத்துபவர் என்ற விதத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தல், இயேசு தந்தையையும் மனிதராகிய நம்மையும் அன்புசெய்ததுபோல நாமும் ஒருவரை ஒருவர் அன்புசெய்தல், துணையாளராகிய தூய ஆவியிடமிருந்து வரும் ஆறுதலும் வழிகாட்டுதலும் ஆகிய இவையே திருச்சபை என்னும் இயக்கம் நிலைபெற்று முன்னேறிட வழிகளாகும் (காண்க யோவா 14:15-17,25-26; 15:26-27; 16:7-11,12-15).
 
பிரியாவிடை உரைகளின் உச்சக் கட்டமாய் அமைவது இயேசுவின் மாபெரும் வேண்டல் (17:1-26) ஆகும். இந்தச் சிறப்புமிகு இறைவேண்டலில் இயேசு கடவுளின் மகனாக நிற்கின்றார். தந்தையிடம் தம்மை மாட்சிப்படுத்தக் கேட்கிறார் (17:5); தம் சீடர்கள் ஒன்றாய் இருக்கவேண்டும் என வேண்டுகிறார் (17:11); சீடர்களின் வார்த்தை வழியாகத் தம்மிடம் நம்பிக்கை கொள்வோரையும் அவர் மறக்கவில்லை: அவர்களும் இயேசு தந்தையோடு ஒன்றித்திருப்பதுபோல தமக்குள் ஒன்றாய் இருக்கும்படி இயேசு வேண்டிக்கொள்கின்றார் (17:20-22)
* '''யோவான் காட்டும் நிறைவாழ்வு'''
 
சாவை வெல்லுகின்ற ''நிறை வாழ்வு'' என்ற கருத்தை யோவான் நற்செய்தி பிற நற்செய்திகளைவிட அதிகமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிறை வாழ்வு சாவுக்குப் பின் வரும் ஒன்றல்ல, அது ஏற்கெனவேஏற்கனவே தொடங்கிவிட்டது; இயேசுவிலும் இயேசுவின் வழியாகவும் அது நமக்கு ஏற்கெனவேஏற்கனவே வழங்கப்படுகிறது என்பதை யோவான் அழுத்திக் கூறுகின்றார்:
 
''என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவேஏற்கனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' (யோவா 5:24).
 
எதிர்காலத்தில் வாழ்வின் நிறைவு மலரும் என்பதை யோவான் நற்செய்தியில் காண்கிறோம் (5:25). என்றாலும், நிறைவாழ்வு இம்மையிலேயே எதார்த்தமாகிறது என்பது அங்கு வலியுறுத்தப்படுகிறது. கிறித்தவ வாழ்வின் இயக்காற்றலை விவிரிக்கும் அழகிய ஒரு பகுதி ''இயேசுவே உண்மையான திராட்சைச் செடி'' என்பதாகும் (யோவா 15:1-10). இயேசு,
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1869118" இருந்து மீள்விக்கப்பட்டது