கோபால கிருஷ்ண கோகலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 23:
 
== இந்தியச் சேவகர்கள் அமைப்பு ==
1905 ஆம் ஆண்டில் கோகலே [[இந்திய தேசிய காங்கிரஸ்]]சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், இது அவருடைய இதயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த, குறிப்பாக இந்தியக் கல்வியின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கானது. கோகலேவுக்கு, இந்தியாவில் உண்மையான அரசியல் மாற்றம் என்பது புதிய தலைமுறை இந்தியர்கள் தங்களுடைய நாட்டிற்கும் மற்றும் ஒருவர் மற்றவர்களிடம் காட்டும் உள்நாட்டு மற்றும் தாய்நாட்டு பற்றுக்கான கடமைக்கான கல்வியைப் பெறும்போதுதான் சாத்தியம் என எண்ணினார். ஏற்கெனவேஏற்கனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், இந்த அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். இந்தியச் சேவகர்கள் அமைப்புக்கான அரசயலமைப்பின் முன்னுரையில் கோகலே இவ்வாறு எழுதினார், "இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்." <ref>ஸ்டான்லி வோல்பெர்ட், திலக் அண்ட் கோகலே: ரெவொலூஷன் அண்ட் ரிஃபார்ம் இன் தி மேகிங் ஆஃப் மாடர்ன் இண்டியா, பெர்கெலி, யூ. கலிஃபோர்னியா (1962), 158-160.</ref> அந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் எடுத்துக்கொண்டது, மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது மற்றும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது.<ref>கேரே ஏ, வாட், "எஜுகேஷன் ஃபார் நேஷனல் எஃப்பீசியன்சி: கன்ஸ்ட்ரக்டிவ் நேஷனலிசம் இன் நார்த் இண்டியா, 1909-1916" ''மாடர்ன் ஏசியன் ஸ்டடீஸ்'' , தொ. 31, எண். 2 (மே, 1997), 341-342, 355.</ref>
 
கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.
 
== ஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு ==
இந்திய தேசிய அமைப்பின் ஆரம்பக்கட்டத் தலைவராக இருந்தபோதிலும், கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சிகள் ஏற்கெனவேஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாக பணி செய்தார்.
 
1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ஆம் ஆண்டில் விரிவடைந்தபின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் மிகவும் அறிவுத்திறமுடையவர் என்னும் பெயரைப் பெற்று ஆண்டு வரவுசெலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். அவர் இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேயுடன் ஒரு சந்திப்புக்காக இலண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார், இவருடன் கோகலே இணக்கமான உறவை மேற்கொண்டிருந்தார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்லே-மிண்டோ திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார்.
"https://ta.wikipedia.org/wiki/கோபால_கிருஷ்ண_கோகலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது