முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
*திருத்தந்தையின் தூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. கிறிசோஸ்தோமும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இறந்தார். இதனால் வெறுப்புற்ற இன்னசெண்ட், கிறிசோஸ்தோமை எதிர்த்த ஆயர்களைச் சபைநீக்கம் செய்தார். இன்னசெண்ட இறந்ததற்குப் பின்னரே கீழைத் திருச்சபைக்கும் மேலைத் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
*எருசலேமில் புனித ஜெரோமின் துறவு இல்லம் குண்டர்களால் தாக்கப்பட்டது என்ற செய்தி திருத்தந்தைக்கு 416இல் தெரியவந்தது. உடனேயே இன்னசெண்ட் ஜெரோமுக்குக் கடிதம் எழுதி, வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் எருசலேம் ஆயரின் ஆளுகையில் அந்தத் தாக்குதல் நடந்ததால் அந்த ஆயரை இன்னசெண்ட் கடிந்துகொண்டார்.
 
==வட ஆப்பிரிக்க திருச்சபையில் இன்னசெண்டின் அதிகாரம்==
திருத்தந்தை இன்னசெண்ட் வட ஆப்பிரிக்காவில் தோன்றி விரிவடைந்த பெலாஜிய தப்பறைக் கொள்கையைக் கண்டித்தார். அக்கொள்கைப்படி, மனிதர்கள் கடவுளின் உதவி இன்றியே தமது சொந்த முயற்சியால் மீட்பு அடைய முடியும். இத்தப்பறைக் கொள்கை கார்த்தேஜ் மற்றும் மிலேவிஸ் என்னும் இரு சங்கங்களால் ஏற்கெனவேஏற்கனவே கண்டனம் செய்யப்பட்டிருந்தது.
 
ஐந்து ஆப்பிரிக்க ஆயர்கள் இன்னசெண்டை அணுகி, அவரும் பெலாஜிய தப்பறையைக் கண்டனம் செய்யக் கேட்டார்கள். அந்த ஆயர்களுள் புனித அகுஸ்தீனும் ஒருவர். இன்னசெண்ட அந்த ஆயர்களுக்கு எழுதிய பதிலில், அவர்கள் பெலாஜியுஸ் பற்றிய சர்ச்சை குறித்து அவரை அணுகியதற்கு அவர்களைப் பாராட்டுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இன்னசெண்ட்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது