"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (clean up, replaced: {{Link FA|af}} →)
 
[[படிமம்:DurbanSign1989.jpg|thumb|right|250px|இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான ஒரு அறிவித்தல் பலகை. ஆங்கிலம், ஆப்பிரிக்கானர், சூலு ஆகிய மொழிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: ''டர்பன் நகரம், டர்பன் கடற்கரைச் சட்ட விதிகளின் 37 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குளிக்கும் பகுதி வெள்ளை இனக் குழு உறுப்பினர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது''. (1989)]]
'''இனவொதுக்கல்''' என்பது, 1948 ஆம் ஆண்டுக்கும், 1990 ஆம் ஆண்டுக்கும் இடையில் [[தென்னாபிரிக்கா]]வில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான [[இனவாரித் தனிமைப்படுத்தல்]] முறையைக் குறிக்கும். இனவொதுக்கலின் அடிப்படை [[குடியேற்றவாதம்|குடியேற்றவாதத்தின்]] வரலாற்றிலிருந்து உருவானது. இதிலிருந்து, இன அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் நடைமுறைகளும் கொள்கையும் உருவானதுடன் ஐரோப்பியக் குடியேற்றக்காரரதும் அவர்களது வழித்தோன்றல்களின் ஆதிக்கமும் நிலைபெறலாயிற்று. 1948 ஆம் ஆண்டுப் [[தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல், 1948|பொதுத் தேர்தலில்]]<ref name="sahistory-1948election">{{cite web |url=http://www.sahistory.org.za/pages/governence-projects/SA-1948-1976/1948-election.htm |title=The 1948 election and the National Party Victory |accessdate=2008-07-13 |author= |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=South African History Online |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref> தேசியக்கட்சி வெற்றி பெற்றதும், அதன் இனவொதுக்கல் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. ஏற்கெனவேஏற்கனவே இருந்த கொள்கைகளும், நடைமுறைகளும்; அமைப்பு முறையான இனவாதத்தையும், வெள்ளையின ஆதிக்கத்தையும் உட்படுத்தி, முறைப்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுக்காலக் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடுத்துப் பணிய வேண்டிய நிலைக்கு வந்த வெள்ளையின அரசுக்கும், கறுப்பினத்தவர் கட்சிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து 1990களின் முதற்பாதியில் நீக்கப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதன் முதலாக அனைத்து மக்கள் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றது.
 
இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது. சட்டப்படி அவர்கள் [[பழங்குடி]] அடிப்படையில் அமைக்கப்பட்டதும், பெயரளவிலான தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டதுமான ''பாண்டுஸ்தான்'' எனப்பட்ட பத்துப் பழங்குடித் தாயகங்களில் ஒன்றின் குடிகள் ஆக்கப்பட்டனர். இவைகளுள் நான்கு பெயரளவில் தனி நாடுகள் ஆயின. இப் பழங்குடித் தாயகங்கள் பரப்பளவில் மிகச் சிறியனவாகவும், பொருளியல் அடிப்படையில் நாட்டின் வளமற்ற நிலப்பகுதிகளை உள்ளடக்கியனவுமாக இருந்தன. பெரும்பாலான கறுப்பினத் தென்னாபிரிக்கர் தமக்கென ஒதுக்கப்பட்ட தாயகங்களில் என்றுமே வசித்ததில்லை. தாயக முறை, வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் [[வாக்குரிமை]]யை இல்லாமலாக்கியது. அரசு, [[கல்வி]], [[மருத்துவ வசதி]], [[பொதுச் சேவை]]கள், என்பவற்றில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் [[பாடசாலை]]களின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1869252" இருந்து மீள்விக்கப்பட்டது