லூக்கா நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
== நூல் எழுதப்பட்ட காலம், இடம் ==
 
லூக்கா நற்செய்தி கி.பி. 85-90 அளவில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பான்மை அறிஞரின் கருத்து. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக கி.பி. 70இல் எருசலேம் நகர் தீத்துவின் தலைமையில் உரோமைப் படையினரால் அழிக்கப்பட்ட செய்தியை லூக்கா வழங்கியிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. எருசலேம் அழிந்துபோகும் என இயேசு முன்னறிவிக்கிறார் (லூக் 19:41-44; 21:20-24). இந்த ''முன்னறிவிப்பு'' உண்மையிலே ஏற்கெனவேஏற்கனவே நடந்துமுடிந்தநடந்து முடிந்த அழிவைப் பின்னோக்கிப் பார்ப்பதாக உள்ளது என்பது அறிஞர் கருத்து. [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தி]] நூலில் காணப்படும் எருசலேம் கோவில் பற்றிய [[தானியேல் (நூல்)|தானியேல்]] மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப் பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5,20; 13:35). எனவே இந்நூல் கி.பி. 70க்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
 
லூக்கா நற்செய்தி எந்த நகரில் எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிரேக்க நாட்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து. வேறு சிலர் [[அந்தியோக்கியா]], அல்லது [[உரோமை]] நகரிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/லூக்கா_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது