தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
{{Main|நார்த் அமெரிக்கன் எக்சு-15}}
 
நாகா எக்சு.எஸ்.-1 ([[பெல் எக்சு-1]] ) திட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வான்படை மற்றும் கப்பற்படை ஒத்துழைப்புடன் [[நார்த் அமெரிக்கன் எக்சு-15|எக்சு-15]] உட்பட கூடுதலான சோதனை வாகனங்கள்/திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒல்லியான விமானவுடலுடன் எரிபொருள் கொண்டிருக்கும் சீர்வடிவங்களும் ஆரம்பகால கணினிமயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் எக்சு-15 வடிவமைப்பில் முக்கியமான அங்கங்களாகும். விண்பந்தயம் ஆரம்பமான பிறகு, ஆளுள்ள விண்பயணத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்கெனவேஏற்கனவே இருந்த ஏவூர்திகள் மூலம் ஏவப்படக்கூடிய எளிமையான விண்கலங்கள் பயன்படுத்தப்பட முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆகவே விண்பயணத்துக்கு, எக்சு-15 வடிவமைப்பை மாற்றுவதற்குப் பதிலாக சிறு அறையுடன் கூடிய விண்கல வடிவமைப்புகள் தேர்வுசெய்யப்பட்டன. அதற்குப் பதிலாக,விண்பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான கருவிகளை உருவாக்கி மேம்படுத்தவும் எக்சு-15கள் பயன்படுத்தப்பட்டன. விண்கலத்தின் திசையமைவை மாற்றுவதற்கு தாரைகளைப் பயன்படுத்துவது, விண்பயண வீரர்களுக்கான விண்ணுடைகள் மற்றும் தொடுவானத்தை வரையறுப்பதற்கான தெரிமுறை செலுத்துநெறி ஆகியவை இதன் மூலமே உருவாக்கி மேம்படுத்தப்பட்டன. 1959-லிருந்து 1968 வரை 200-க்கு சற்றே குறைவான விண்பயணங்கள் எக்சு-15-ஆல் மேற்கொள்ளப்பட்டன; இதன்மூலம் விண்பந்தய காலத்துக்குத் தேவையான தரவுகள் மட்டுமின்றி விண்ணோட வடிவமைப்புக்குத் தேவையான தரவுகளும் பெறப்பட்டன. எக்சு-15 அதிகபட்சமாக 354,200 அடிகள் (107.96 கிமீ) உயரத்தை எட்டியது.
 
====மெர்க்குரி திட்டம் (1959-63)====