மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 132:
=== பழங்கால இலக்கியம் ===
 
மலையாள இலக்கியத்தின் ஆரம்ப காலம் நாடோடி பாடல்கள், தமிழ் - சமஸ்கிருத மொழிகளுடன் துவங்கியது. . மலையாளத்தில் கிடைத்திருக்கும் மிகப்பழைய கல்வெட்டு சேரப்பெருமக்கன்மார்காளில் ராஜசேகரன் பெருமாளின் காலத்தியதாகும். கி.பி 830இல் எழுதப்பட்டதாக இந்த வாழப்பள்ளி கல்வெட்டு கருதப்படுகிறது. கிரந்த எழுத்துக்களில் உள்ள இந்த கல்வெட்டு, சேரப்பெருமக்கன்மார்களுடைய வம்சாவளியும் நிலவிவரங்களும் (കാര്‍ഷികവിവരങ്ങളും) பதிவாகப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த மலையாள இலக்கியத்தை இவ்விதமாக பிரிக்கலாம்.
 
# தமிழ் மரபை ஒட்டிய ''பாட்டு'' இலக்கியங்கள்
# வடமொழி மரபை ஒட்டிய ''மணிப்பிரவாள'' இலக்கியங்கள்
# மலையளத்திலுள்ள தூது காவியங்கள் (സന്ദേശകാവ്യങ്ങള്‍), சம்பூக்கள் (ചമ്പൂക്കള്‍) மற்றும் இதர படைப்புகள்
 
பாட்டிலக்கியத்தில் பழமையானது ''சீராமன்'' எழுதிய ''ராமசரிதம் (രാമചരിതം)'' ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணஸ்ஸராமயணத்தில் காணலாம்.
 
<blockquote>
வரிசை 146:
</blockquote>
 
ராமசரிதம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றிண்டிலேயே வைகாசிகதந்திரம் என்ற மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. பொது மணிப்பிரவாளப் படைப்புகள் சமஸ்கிருத விபக்திபிரயோகங்களும் (വിഭക്തിപ്രയോഗങ്ങളും) தமிழ்ச் சொற்களும் மற்றும் பழைய மலையாளச் சொற்களும் சேர்ந்தவையாக இருந்தன. சமஸ்கிருதத்தின் கூடுதல் தாக்கமுடைய சுகுமாரகவின் ஸ்ரீகிருஷ்விலாசமும், சங்கராச்சாரியருடைய தோத்திர மரபில் இயற்றப்பட்ட நூல்களும் இதே காலக்கட்டதில் பிரபலமாக இருந்தன. வில்வங்கள சுவாமியாரின் சமஸ்கிருத தோத்திரங்களும் மணிப்பிரவாளத்தில் [[வசுதேவஸ்தவம்]] போலுள்ள படைப்புகளும் 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவையாகும்
 
கேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருஷ்ணகாதையில் ஆகும். தமிழிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது. நாடோடிப் பாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருஷ்ணகாதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது. தற்கால மலையாள கவிகளான [[வள்ளத்தோள்]], வைலோபிள்ளி, பாலாமணியம்ம போன்றவர்களுடைய கவிதைகளில் கிருஷ்ணகாதையின் தாக்கத்தை காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது