விருத்திராசூரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg|right|thumb|விருத்திரனும், [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியும்]], சனகாதி முனிவர்களிடம் உபதேசம் பெறல்]]
[[File:Story of Vritra.jpg|thumb|[[வஜ்ஜிராயுதம்]] கொண்டு இந்திரன், விருத்திராசூரனை கொல்தல்]]
'''விருத்திராசூரன்''', தைத்திய குலத்தைச் சார்ந்த பிரஜாபதி துவஷ்டாவின் இரண்டாம் மகன். [[இந்திரன்|இந்திரனை]] வென்று [[தேவலோகம்|தேவலோகத்தை]] கைப்பற்றி ஆண்டவன். தேவர்களின் பகைவன். இந்திரன், [[தசீசி முனிவர்|தசீசி முனிவரின்]] முதுகெலும்பை [[வஜ்ஜிராயுதம்|வஜ்ஜிராயுதமாகக்]] கொண்டு விருத்திராசூரனை கொன்றான்.
 
==புராண வரலாறு==
[[தேவலோகம்|தேவலோகத்தை]] விட்டு சிறிது காலம் விலகிய தேவகுரு [[பிரகஸ்பதி]]யின் பணியினை செய்ய, பிரஜாபதி துவஷ்டாவின் மகன் விசுவரூபனை தற்காலிக குருவாக நியமித்தார் இந்திரன். யாகத்தின் போது ஆஹூதிகளை தேவர்களுக்கு வழங்கியதுடன், தன் இனத்தை சேர்ந்த தைத்தியர்களுக்கும் விஸ்வரூபன் வழங்கியதைக் கண்ட இந்திரன், விஸ்வரூபனை கொன்றார். இதனால் இந்திரனுக்கு [[பிரம்மஹத்தி தோசம்]] பற்றிக் கொண்டது. விஸ்வரூபன், இந்திரனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த '''துவஷ்டா''' கடும் கோபம் கொண்டு இந்திரனை அழிக்க, யாகம் மூலம் விருத்திராசூரன் என்ற மகனை பெற்றான். [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியின்]] சீடனான விருத்திராசூரனும் கடும் தவம் செய்து, யாரும் அறிந்த போர்க் கருவிகளால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என [[பிரம்மா|பிரம்மாவிடமிருந்து]] வரம் பெற்றான். தன் அண்ணன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனை வென்று, இந்திரலோகத்தையும் [[ஐராவதம்|ஐராவதத்ததையும்]] தன் கைவசப்படுத்தினான்.
 
விருத்திராசூரனிடம் தோற்ற இந்திரன், [[திருமால்|திருமாலிடம்]] சென்று நடந்தவற்றை உரைத்தான். திருமால், '''தசிசீ''' முனிவரின் முதுகெலும்பை [[வஜ்ஜிராயுதம்|வஜ்ஜிராயுதமாகக்]] கொண்டு விருத்திராசூரனை கொல்வாய் என ஆலோசனை வழங்க, இந்திரனும் அவ்வாறே வஜ்ஜிராயுதத்தினால் விருத்திராசூரனை கொன்றான்.<ref>[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D விருத்திரன்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விருத்திராசூரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது