குங்கிலியக்கலய நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''குங்கிலியக்கலய நாயனார்''' என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர்.
"கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" - [[திருத்தொண்டத் தொகை]]
 
[[காவிரி]] பாயும் சோழவளநாட்டில் [[திருக்கடவூர்]] என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.
வரிசை 23:
 
திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் [[ஆளுடைய பிள்ளையார்|ஆளுடைய பிள்ளையாரும்]] [[ஆளுடைய அரசு]]களும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார். தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து [[சிவபெருமான்|சிவபெருமானது]] திருவடி நிழலிற் சேர்ந்தார்.
 
"கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்" - [[திருத்தொண்டத் தொகை]]
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/குங்கிலியக்கலய_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது