பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
இந்திய-அரபு எண்முறையில், பதின்மக் குறியீடு என்பது, மேற்காட்டியவாறான பதின்ம எண்ணீட்டை (numeration) மட்டும் குறிக்காமல், பதின்மப் [[பின்னம்|பின்னங்களையும்]] சேர்த்து இடஞ்சார் முறைமூலம் குறிக்கப்படுகின்றது. இடஞ்சார் பதின்ம முறையில், [[சுழியம்]] உட்படப் பத்துப் பெறுமானங்களைக் (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்பன) கொண்ட குறியீடுகள் பயன்படுகின்றன. இக்குறியீடுகள் [[இலக்கம்|இலக்கங்கள்]] எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, எந்தவொரு எண்ணையும் எழுத முடியும். எண் எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது ஒரு பொருட்டல்ல. பின்னப் பகுதிகளைக் கொண்ட எண்களை எழுதும்போது, இவ்விலக்கங்கள் [[பதின்மப் பிரிப்பான்|பதின்மப் பிரிப்பானுடன்]] பயன்படுகின்றன. இப்பதின்மப் பிரிப்பான் முழுஎண் முடிந்து பின்னப் பகுதி தொடங்கும் இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஒரு புள்ளியே பதின்மப் பிரிப்பானாகப் பயன்படுகிறது. சில நாடுகளில் பதின்மப் பிரிப்பானாக ஒரு காற்பிள்ளியைப் பயன்படுத்துவதும் உண்டு. இதோடு [[கூட்டல் குறி]] (+), [[கழித்தல் குறி]] (-) ஆகியவையும், எண்ணுக்கு முன்னால் பயன்படுவது உண்டு. கூட்டல் குறி எண் சுழியத்திலும் பெரிது ([[நேர் எண்]]) என்பதையும், கழித்தல் குறி, எண் சுழியத்திலும் சிறியது ([[எதிர் எண்]]) என்பதையும் குறிக்கின்றன.
 
இடஞ்சார் குறியீடு, இடங்களை, ஒன்றுகள் (10<sup>0</sup>), பத்துக்கள் (10<sup>1</sup>), நூறுகள் (10<sup>2</sup>), ஆயிரங்கள் (10<sup>3</sup>) போன்ற பத்தின் அடுக்குகளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது. ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கமும் அவ்விலக்கத்தைக் குறித்த இடத்துக்குரிய பத்தின் அடுக்கால் பெருக்கும்போது கிடைக்கும் பெறுமதிக்குச் சமமாகும். ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இடமும் அதற்கு வலப்பக்கத்தில் உள்ள இடத்திலும் பத்து மடங்கு கூடிய பெறுமானம் கொண்டது.
 
== ஏனைய விகிதமுறு எண்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பதின்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது