ஆர்க்டிக் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
தமிழக வழக்கு உள்ளது
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[Image:World map with arctic circle.svg|thumb|350px|உலகப் படத்தில் ஆர்க்டிக் வட்டம் செந் நிறக் கோடாகக் காட்டப்பட்டுள்ளது]]
[[Image:Arctic Circle sign.jpg|thumb|right|200px|அலாஸ்காவில் ஆர்க்டிக் வட்டத்தைக் குறிக்கும் ஒரு அறிவிப்புப் பலகை. டால்டன் நெடுஞ்சாலையில் உள்ளது.]]
'''ஆர்க்டிக் வட்டம்''' (''Arctic circle'') என்பது ஐந்து முதன்மையான நிலநேர்க்கோட்டு வட்டங்களுள் ஒன்று. இது நிலநடுக்கோட்டுக்கு வடக்கே 66[[பாகை|°]] 33′ 39″ (அல்லது 66.56083°) இல் அதற்கு இணையாக அமைந்துள்ளது. இவ்வட்டத்துக்கு வடக்கில் உள்ள பகுதி [[ஆர்க்டிக்]] எனவும், அதற்கு அருகே தெற்கில் அமைந்துள்ள பகுதி [[வட மிதவெப்ப வலயம்]] எனவும் அழைக்கப்படுகின்றது. இதை ஒத்துத் தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ள வட்டம் [[அண்டார்க்டிக் வட்டம்]] எனப்படுகிறது.
 
ஆர்க்டிக் வட்டம் 24 மணிநேர சூரிய ஒளி இருக்கும் [[துருவ நாள்|துருவ நாளினதும்]], 24 மணிநேரம் சூரியனே தென்படாத [[துருவ இரவு|துருவ இரவினதும்]] தென் எல்லையைக் குறிக்கிறது. ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே ஆண்டுக்கு ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் சூரியன் அடிவானத்துக்கு மேலும், அதே போல் ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் அடிவானத்துக்குக் கீழும் இருக்கும். ஆர்க்டிக் வட்டத்தில் இந் நிகழ்வுகள் சரியாக ஆண்டுக்கு ஒருமுறை முறையே ஜூன் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் [[ஞாயிற்றுக் கணநிலை நேரம்|ஞாயிற்றுக் கணநிலை நேரத்தில்]] இடம்பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது