"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
disambiguation links fixed
சி (தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (disambiguation links fixed)
 
==1940-1950 காலகட்டங்களில்==
1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகமும்]] [[பெரியார்|பெரியாரும்]] உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர்.<ref name="williams">{{cite book | first=Rohit | last=Wanchoo| first2=Mukesh | last2=Williams| authorlink=| coauthors= | origyear=| year=2007| title= Representing India: literatures, politics, and identities |edition= | publisher=Oxford University Press| location= | id=ISBN 0195692268, ISBN 9780195692266| pages=73| url=http://books.google.com/books?id=3uYTAQAAIAAJ}}</ref> இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. [[இந்தியா]] [[அரசியல் விடுதலை|விடுதலை]] பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, [[இந்தி]]யைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்]] தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. [[பெரியார்|பெரியாரின்]] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த [[ம. பொ. சிவஞானம்]] மற்றும் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு.வி.க]] தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy522"/><ref name="vasantha">{{Harvnb|Kandasamy|Smarandache|2005| pp=108-110}}</ref>
 
ஜூலை 17, 1948ல் [[திராவிடர் கழகம்]] (தி.க) ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், [[கருப்புக் கொடி போராட்டம்|கருப்பு கொடி போராட்டங்கள்]], அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக [[அண்ணாதுரை]], [[பெரியார்]] உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் [[அரசியல் விடுதலை|விடுதலை]] செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. [[டிசம்பர்]] 18 ஆம் தேதி [[பெரியார்]] மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் [[இந்தி]]ப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் [[இந்தி]] வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.<ref>{{cite book|last=Ravichandran|first=R|coauthors=C. A. Perumal|title=Dravidar Kazhagam - A political study|location=Madras|chapter=5|url=http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4724/6/MAU-1982-082-5.pdf|accessdate=17 February 2010|publisher=[[சென்னைப் பல்கலைக்கழகம்]]| year=1982|pages=177-180}}</ref>
 
== இந்திய அரசியலமைப்பில் மொழிகள் ==
[[Image:Indian Constituent Assembly.JPG|thumb|right|300px|இந்திய அரசியலமைப்பு மன்றத்தின் முதல் நாள் (திசம்பர் 11, 1946). வலதிலிருந்து : [[பி. ஜி. கெர்]] மற்றும் [[சர்தார் வல்லபாய் படேல்]]; படேலின் பின்பாக [[கே. எம். முன்ஷி]] ]]
[[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்]] திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு [[அரசியல் விடுதலை|விடுதலை]] பெற்ற [[இந்தியா]]வின் [[இந்திய அரசியலமைப்பு|அரசியலமைப்புச் சட்டத்தை]] உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான “தேசியமொழி” போன்ற விஷயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன.<ref name="hindu2">{{cite news
| url = http://www.hinduonnet.com/thehindu/mag/2004/01/18/stories/2004011800040300.htm
| title = Hindi chauvinism
[[தேவநாகரி]] எழுத்துருவில் அமைந்த [[இந்தி]] இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் (உட்பிரிவு 343). ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஓர் மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும் (உட்பிரிவு 344). மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகளும் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இடையேயான தொடர்புகளும் ஒன்றியத்தின் அலுவலக மொழியில் அமையும் (உட்பிரிவு 345). ஆங்கிலம் அனைத்து சட்ட நடிவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் - [[நீதிமன்றம்|நீதிமன்றங்கள்]], [[சட்டம்|சட்டங்கள்]], [[மசோதா|மசோதாக்கள்]], [[விதி|விதிகள்]] மற்றும் பிற கட்டுப்பாடுகள் (உட்பிரிவு 348). இந்தியின் பரவலையும் பயன்பாட்டையும் வளர்ப்பது ஒன்றியத்தின் கடமையாகும்.(உட்பிரிவு 351).
 
[[இந்தியா]] 15 ஆகத்து 1947 ல் [[அரசியல் விடுதலை|விடுதலை]] பெற்றது. [[இந்திய அரசியலமைப்பு]] 26 சனவரி 1950 நாளிலிருந்து நடப்புக்கு வந்தது.
 
==மொழி ஆணையம் ==
பிப்ரவரி 1965இல் [[லால் பகதூர் சாஸ்திரி]]யின் வாக்குறுதிகளுக்கிணங்க அலுவல்மொழிகள் சட்டத்தைத் திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்தி ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டன. 16 பிப்ரவரியன்றே எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதை பொதுமேடையில் எதிர்த்தனர். 19 பிப்ரவரியில் [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்]]தைச்சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றையடுத்து 25 பிப்ரவரியன்று 106 காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்காது 12 மார்ச் அன்று பிரதமரைத் தனியாக சந்தித்தனர். ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சிகளுக்குள் உள்ள பிரிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பவில்லை. 22 பிப்ரவரியில் காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில் கட்சித்தலைவர் [[காமராஜர்]] சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவர வற்புறுத்தியபோது உடனேயே [[மொரார்ஜி தேசாய்]], [[ஜகஜீவன் ராம்]], [[ராம் சுபாக்]] போன்றவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் செயற்குழு இந்தி அமலாக்கத்தை மிதப்படுத்தும் வகையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்மொழித் திட்டத்தைத் தீவிரமாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுச்சேவை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று ஆங்கிலத்தின் வீச்சைக் குறைக்க தீர்மானம் இயற்றியது. இந்த முடிவுகள் 24 பிப்ரவரியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.<ref name="Duncan B. Forrester"/>
 
[[மும்மொழித் திட்டம்]] தென்னிந்தியாவிலோ பிற இந்தி பேசும் மாநிலங்களிலோ முறையாகப் பின்பற்றப்படவில்லை. பொதுச்சேவை தேர்வுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு ஒவ்வாததாக அரசு அலுவலர்கள் கருதினர். தென்னகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே சலுகை அலுவல்மொழி சட்டம் திருத்தப்படும் என்பதே. எனினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஏப்ரல் 1965இல் [[குல்சாரிலால் நந்தா]], [[ஏ. கே. சென்]], [[சத்தியநாராயண் சின்கா]], மகாவீர் தியாகி, [[எம். சி. சாக்ளா]] மற்றும் [[எஸ்.கே.பாட்டீல்]] அடங்கிய அமைச்சரவை துணைக்குழு (இந்த துணைக்குழுவில் தென்னிந்திய உறுப்பினர்கள் எவருமில்லை) விவாதித்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாமல், ஆங்கிலமும் இந்தியும் இணையாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பரிந்துரைத்தது. இக்குழு பொதுச்சேவை தேர்வுகளில் இடவொதுக்கீடு அல்லது மண்டல மொழிகள் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கவில்லை. நேருவின் வாக்குறுதியை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அலுவல்மொழி சட்டத்தில் மாற்றங்களுக்கான வரைவை தயாரித்தனர். இந்த வரைவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மாநிலங்களிடையே மற்றும் மாநில மத்திய அரசுகளிடையே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை தொடர உத்திரவாதம் அளிக்கப்பட்டது. [[ஆகஸ்ட்|ஆகத்து]] 25 அன்று அவைத்தலைவரால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] பிரிவினைப் போராட்டங்கள் மற்றும் காசுமீரப் பிரச்சினைகளின் இடையே இத்திருத்தம் கொண்டுவர சரியான நேரம் இல்லையென அறிமுகப்படுத்தப்படவில்லை.<ref name="Duncan B. Forrester"/>
 
===1967 ஆண்டு திருத்த மசோதா===
 
==1968 ஆண்டு போராட்டம்==
1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டத்தினைக் குறித்த கவலைகளை நீக்காததால் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் திருப்தியடையவில்லை. ஆயினும் [[திமுக]] ஆட்சியில் இருந்ததால் மீண்டும் தங்கள் போராட்டங்களைத் துவக்கத் தயங்கினார்கள். [[தமிழ்நாடு]] [[இந்தி]] எதிர்ப்புப் போரட்டச் சங்கம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. மிதவாதிகள் [[கா. ந. அண்ணாதுரை|அண்ணா துரையின்]] அரசை ஆவன செய்ய விடவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். தீவிரவாத பிரிவுகள் போராட்டத்தை மீண்டும் துவக்கின. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும்; இந்திக் கல்வியை நீக்க வேண்டும்; [[தேசிய மாணவர் படை (இந்தியா)|தேசிய மாணவர் படையில்]] (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்; தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட ''தட்சிண இந்தி பிரசார சபை'' மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.
 
19 திசம்பர் 1967 அன்று போராட்டம் துவங்கியது. 21 திசம்பர் அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. அண்ணாதுரை நிலமையைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார்.<ref name="mitra"/><ref name="madrasreport">{{cite book | first=| last=| authorlink= | coauthors= | origyear=| year= 1968| title= Madras State administration report|edition= | publisher=Govt of Madras| location= | id= | pages=116| url =http://books.google.com/books?id=1nAdAAAAIAAJ}}</ref> 23 சனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தது:<ref>{{cite web
}}</ref>
* மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாக கல்வித்திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது.
* [[தேசிய மாணவர் படை (இந்தியா)|தேசிய மாணவர் படை]]யில் இந்தி ஆணைச்சொற்கள் விலக்கப்பட்டன.
* அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.
* ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ் அலுவல்மொழியாக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
19,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880037" இருந்து மீள்விக்கப்பட்டது