"வாஸ்கோ ட காமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎மேற்கோள்கள்: clean up, removed: {{Link FA|ceb}})
 
மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் [[வணிகக் காற்று|வணிகக் காற்றையும்]], அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் [[மலபார்]] கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய [[தென்மேற்கு பருவக்காற்று|தென்மேற்கு பருவக்காற்றாலே]] தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று.வாஸ்கோடகாமா 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள கோழிக்கூடு என்ற பகுதியினை வந்தடைந்தார். கோழிக்கூடு பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். வாஸ்கோடகாமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அவர் திரும்பிச்செல்கையில் பல விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றார். இதனால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வர விரும்பினர். வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. வாஸ்கோடகாமா 1501-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தலம் ஒன்றை நிறுவினார். இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக [[அரபு நாடு]]கள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது.
 
==இறப்பு==
1524-இல் இந்தியாவின் வைசிராயாக ஆக்கப்பட்ட பின்பு தனது மூன்றாவது கடல் பயணத்தை இந்தியாவுக்குத் துவக்கினார். 1524 செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். அச்சமயத்தில் கழுத்தைச் சுற்றிக் கொப்புளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். 1524 திசம்பர் 25-இல் கொச்சியில் இறந்தார்<ref>{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடம் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2012 | location=பக், 162 - வாஸ்கோவின் வெறியாட்டம்}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1880798" இருந்து மீள்விக்கப்பட்டது