இராயக்கோட்டை (கோட்டை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தரைக்கோட்டை: + விரிவு
வரிசை 22:
 
==தரைக்கோட்டை==
மலைக்கோட்டையில் அரச பரம்பரையினர் வாழ்ந்தனர்.அவர்களின் பாதுகாப்புக்காக தரைக்கோட்டைக் கட்டப்பட்டது. இது செகத்தேவராயர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை இருந்தது. இப்பகுதியில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக ஆண்டுவந்தவர்கள், ஒவ்வொரு காலத்திலும், ஒரு நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தினர்.
 
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1792 ஆம் ஆண்டு, மேஜர் கௌடி தலைமையில், 800 வீரர்கள் கொண்ட படை, [[திப்புசுல்தான்|திப்புசுல்தானைத்]] தாக்க வந்தது. இரண்டு நாட்கள் நடந்த சண்டைக்குப் பிறகே, இக்கோட்டையின் வடக்குப்பகுதி மதிலை, [[பீரங்கி]] கொண்டு தகர்த்தனர். அந்த அளவுக்கு இத்தரைக்கோட்டை உறுதியாக இருந்துள்ளது. தொடர்ந்து ஆங்கிலேயப்படை அங்கு தங்கியது. அக்காலக்கட்டத்தில் இறந்த படையினரின் உடல்கள் அங்கேயேப் புதைக்கப் பட்டன. அதில் முக்கியமானவர் ஜான் இன்னிஷ் ஆவார். அவர் இறந்த தேதி20 மார்ச்சு 1802 என, இராயக்கோட்டைச் சாலையிலுள்ள பள்ளி அருகே இருக்கும் சமாதி கூறுகிறது.
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராயக்கோட்டை_(கோட்டை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது