முப்பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[வேதியியல்|வேதியியலில்]] '''முப்பிணைப்பு''' ''(Triple bond)'' என்பது இரண்டு [[அணு]]க்களுக்கு இடையேயான ஒரு [[ வேதிப் பிணைப்பு]] வகையாகும். வழக்கமாக [[ சகப்பிணைப்பு]] வகையிலான [[ஒற்றைப் பிணைப்பு]]களில் இரண்டு பிணைப்பு [[எலக்ட்ரான்]]கள் மட்டுமே பங்கேற்கும். ஆனால், முப்பிணைப்பில் ஆறு பிணைப்பு எலக்ட்ரான்கள் பங்கேற்கின்றன. இரண்டு [[கார்பன்]] அணுக்களுக்கிடையே காணப்படும் இத்தகைய முப்பிணைப்பை பொதுவாக [[ஆல்க்கைன்]]களில் காணமுடியும். இவைகளைத் தவிர [[சயனைடு]]கள் மற்றும் [[சமசயனைடு]]கள் போன்ற [[வேதி வினைக்குழு]]க்கள் இத்தகைய முப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. [[இருநைட்ரசன்]] மற்றும் [[கார்பனோராக்சைடு|கார்பன் ஓராக்சைடு]] போன்ற [[ஈரணு மூலக்கூறு]]களும் இவ்வகை முப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. அடிப்படை வேதி வாய்ப்பாட்டில் இரண்டு அணுக்களுக்கு இடையேயான முப்பிணைப்பை அவற்றின் குறியீடுகளுக்கு இடையில் மூன்று சிறிய இணைகோடுகள் வரைந்து குறிப்பிடுவர்(≡)<!--may be encoded on WP as &equiv;--> . முப்பிணைப்பை அடையாளப்படுத்த உதவும் கருவியாக [[அச்சுக்கலை]]யிலும் இந்தக் குறியீடே பயன்படுகிறது<ref>{{JerryMarch}}</ref><ref>''Organic Chemistry'' 2nd Ed. John McMurry</ref><ref>{{cite journal|doi=10.1002/chem.200401299|title=Triple-Bond Covalent Radii|year=2005|last1=Pyykkö|first1=Pekka|last2=Riedel|first2=Sebastian|last3=Patzschke|first3=Michael|journal=Chemistry - A European Journal|volume=11|issue=12|pages=3511–20|pmid=15832398}}</ref>.
 
முப்பிணைப்புகள் இரட்டைப் பிணைப்பு மற்றும் ஒற்றைப் பிணைப்புகளைவிட வலிமையானவையாகும். குறுகிய பிணைப்பு நீளம் கொண்ட முப்பிணைப்பின் [[பிணைப்பு வரிசை]] 3 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1882881" இருந்து மீள்விக்கப்பட்டது