சி. எஸ். ஜெயராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==தொழில்==
ஜெயராமன் பிறந்த ஆண்டு குறித்துத் தெளிவில்லை. இவர் தமிழ்த் திரைப்படங்களில் 1934ம் ஆண்டில் நடிக்கத் தொடங்கியதால் இவர் 1917 ஆம் ஆண்டு வாக்கில் பிறந்திருக்கலாம். ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), பூம்பாவை (1944) கிருஷ்ண பக்தி (1948) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
நடிப்புத் தவிர, உதயனன் வாசவதத்தா (1946), [[இரத்தக் கண்ணீர்]] (1954) ஆகிய இரண்டு படங்களுக்குத் தனியாக இசையமைத்துள்ளார். இவற்றைவிட, விஜயகுமாரி (1950), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.
 
==சி. எஸ். ஜெயராமன் பாடிய சில பாடல்கள் :==
"https://ta.wikipedia.org/wiki/சி._எஸ்._ஜெயராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது