பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தாருகா வன முனிவர்கள்''' மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், [[ஈஸ்வரன் (இந்து தத்துவம்)|இறைவனை]] மதியாது, [[வேதம்|வேத நெறிகளையும்]] சில [[கர்மங்கள்|கடமைகளையும்]] மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
 
இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களுக்கு பாடம் புகட்ட, [[சிவன்|சிவபெருமான்]] அழகிய [[பிட்சாடனர்|பிச்சாண்டவர்]] (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் தாருகாவனம் சென்றார். பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர்.
 
அதுகண்ட முனிவர்கள் கோபம் மேலிட்டு பிச்சாண்டவரைக் கொல்ல, ஒரு வேள்வியைச் செய்து, அதிலிருந்து தோன்றிய புலி, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன.
 
இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. பின்னர் தாருகாவனத்து முனிவர்கள் நல்லறிவு பெற்று [[சிவன்|பிச்சாண்டவரை]] வணங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது