ஒமாகா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} → (2)
No edit summary
வரிசை 21:
'''ஒமாஃகா கடற்கரை''' (ஒமாஹா கடற்கரை; ''Omaha Beach'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யில் [[நார்மாண்டி]] கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். ([[ஒமாஃகா]] அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான் [[நெப்ராஸ்கா]]விலுள்ள நகரம்).
 
[[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பிலிருந்த [[பிரான்சு]] மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல் வழிவழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - [[யூட்டா கடற்கரை|யூட்டா]], ஒமாகா, [[கோல்ட் கடற்கரை|கோல்ட்]], [[ஜூனோ கடற்கரை|ஜூனோ]] மற்றும் [[சுவார்ட் கடற்கரை|சுவார்ட்]]. 8 கிமீ நீளமுள்ள ஒமாகா கடற்கரை யூட்டா மற்றும் கோல்ட் கடற்கரைகளுக்கு இடையில் அமைந்திருந்தது. சென்-ஹொனோர்-டெ-பெர்டே கம்யூனிலிருந்து [[டூவ் ஆறு|டூவ் ஆற்றின்]] முகத்துவாரத்தின் வடகரையிலுள்ள வியர்வில் கம்யூன் வரையான கடற்கரை ஒமாகா என்று பெயரிடப்பட்டிருந்தது.
 
ஒமாகா கடற்கரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன் மேற்குப் பகுதியைக் கைப்பற்றும் பொறுப்பு அமெரிக்க 29வது காலாட்படை [[டிவிசன்]] மற்றும் அமெரிக்கத் தரைப்படை ரேஞ்சர் படைப்பிரிவின் ஒன்பது [[கம்பனி (படைப்பிரிவு)|கம்பனிகளுக்கு]] ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிழக்குப் பகுதியினைக் கைப்பற்றும் பொறுப்பு 1வது அமெரிக்கக் காலாட்படை டிவிசனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் 29வது டிவிசன் போர் அனுபவமற்ற படைப்பிரிவு, 1வது டிவிசன் அனுபவம் வாய்ந்தது. இவர்களை எதிர்க்க ஜெர்மானிய 352வது காலாட்படை டிவிசன் ஒமாகா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கிழக்குப் போர்முனையிலிருந்து]] நார்மாண்டிக்கு மாற்றப்பட்டிருந்த இப்படைப்பிரிவில் ஒரு பகுதியினர் மட்டுமே போர் அனுபவம் உடையவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஒமாகா_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது