சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது என்பது ஒரு கொள்கை. இல்லை இது திராவிட மொழிக்கான(தமிழ்) எழுத்து வடிவமேயென்பது இரண்டாவது கொள்கை.
 
===திராவிடமொழிக் கருதுகோள்===
===திராவிடமொழி எடுகோள்===
உருசிய அறிஞரான [[யூரி நோரோசோவ்]], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி [[ஒட்டுநிலை மொழி|ஒட்டுநிலைத்]] திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார். இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முந்து திராவிடமொழி என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார்.
 
பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும், சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் பெரும்பாலும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ததாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1960கள் முதல் 1980கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முந்து திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் திராவிடச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன.
 
[[ஆஸ்கோ பர்போலா]], [[ஐராவதம் மகாதேவன்]] போன்ற ஆராய்ச்சி யாளர்கள் [[சமஸ்கிருதம்]], கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த [[ஆரியர்]]களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான [[ரிக் வேதம்]] நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற [[நகரப் பண்பாடு]] ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான [[குதிரை]], சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது