சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
===திராவிடமொழிக் கருதுகோள்===
உருசிய அறிஞரான [[யூரி நோரோசோவ்]], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி [[ஒட்டுநிலை மொழி|ஒட்டுநிலைத்]] திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.<ref>(Knorozov 1965)</ref> இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முந்து திராவிடமொழி என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார்.<ref>(Heras, 1953)</ref>
 
பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும், சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் பெரும்பாலும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ததாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.<ref>{{cite book|title=The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate|page=183|author=Edwin Bryant|publisher=Oxford|isbn=9780195169478}}</ref> 1960கள் முதல் 1980கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முந்து திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் திராவிடச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் ''சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல்'' ''(Deciphering the Indus Script)'' என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன.<ref>(Parpola, 1994)</ref> தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (2ம் ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை திராவிடமொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.<ref>(Subramanium 2006; see also [http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html A Note on the Muruku Sign of the Indus Script in light of the Mayiladuthurai Stone Axe Discovery] by I. Mahadevan (2006)</ref><ref>{{cite web|url=http://www.hinduonnet.com/2006/05/01/stories/2006050101992000.htm|title=Significance of Mayiladuthurai find - The Hindu|date=May 1, 2006}}</ref> 2007 மே மாதத்தில், தமிழ்நாடு தொல்லியல் பகுதியால் பூம்புகாருக்கு அண்மையில் உள்ள மேலப்பெரும்பள்ளம் என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில், அம்புத்தலைக் குறியீடுகளுடன்கூடிய பானைகள் கிடைத்தன. இந்தக் குறிகள், 1920ல் மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள குறியீடுகளுடன் ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.<ref name="indus_coastaltn">{{cite news | last=Subramaniam | first=T. S. | title= From Indus Valley to coastal Tamil Nadu | date=May 1, 2006 | url = http://www.hindu.com/2008/05/03/stories/2008050353942200.htm | work =The Hindu | accessdate = 2008-05-23 | location=Chennai, India}}</ref>
 
[[ஆஸ்கோ பர்போலா]], [[ஐராவதம் மகாதேவன்]] போன்ற ஆராய்ச்சி யாளர்கள் [[சமஸ்கிருதம்]], கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த [[ஆரியர்]]களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான [[ரிக் வேதம்]] நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற [[நகரப் பண்பாடு]] ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான [[குதிரை]], சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது