சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
===சமசுக்கிருத எடுகோள்===
இந்தியத் தொல்லியலாளர் சிக்காரிபுர ரங்கநாத ராவ், தான் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாக அறிவித்தார். சிந்துவெளி நாகரிகத்தின் முழுப்பரப்பிலும் ஒருசீரான எழுத்துக்களே பயன்பாட்டில் இருந்தன என்ற எடுகோளுடன், அவ்வெழுத்துக்களை அவர் பினீசிய எழுத்துக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒலிப் பெறுமானங்களை வழங்கினார். இவ்வாறான இவரது வாசிப்பு ஒரு சமசுக்கிருத வாசிப்பாக அமைந்தது. 1, 3, 4, 5, 7, 10, 12, 100 போன்ற எண்களுக்கும், ''ஏக்க, ட்ரா, சத்துஸ், பன்ட்டா, ஹப்தா/சப்தா, தசா, த்வாதசா, சத்தா'' என சமசுக்கிருத ஒலிப்புக்களாகவே வாசித்தார்.<ref>{{cite book|title=A Manual of Historical Research Methodology|page=268|year=2007|publisher=South Indian Studies|author=Sreedharan}}</ref> பிந்திய அரப்பா வரிவடிவங்களுக்கும், பினீசிய எழுத்துக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வடிவ ஒற்றுமைகளை எடுத்துக்காட்டிய அவர், பினீசிய எழுத்துக்கள் அரப்பா எழுத்துக்களிலிருந்தே உருவானதாக வாதித்தார்.
 
ஜான் ஈ. மிச்சினர் இவ்வாறான சில வாசிப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ராவினுடைய வாசிப்பு ஓரளவுக்கு முறையான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், பெருமளவு தற்சார்பு கொண்டதாகவும், இந்திய-ஐரோப்பிய மொழி அடிப்படையை விளக்குவதில் இது நம்பத்தக்க முயற்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.<ref>J.E. Mitchiner: ''Studies in the Indus Valley Inscriptions'', p.5, with reference to S.R. Rao: ''Lothal and the Indus Civilisation'' (ch.10), Bombay 1978.</ref>
 
சமஸ்கிருதக் கொள்கையின் ஆதரவாளர்கள், [[சமஸ்கிருதம்]] [[இந்தியா]]விலேயே தோன்றி வளர்ந்ததென்று காட்டமுற்படுகிறார்கள். ஆனால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சான்றுகளின்படி சிந்துவெளி வரிவடிவங்களில் [[தமிழ் பிராமி]] வரிவடிவங்களை நோக்கிய வளர்ச்சி காணப்படுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். இக் கடைசிக் கூற்றுச் சரியாயின், தமிழ் பிராமி எழுத்துக்களே [[முதல்நிலைத் திராவிட மொழி]]யொன்றுக்காகத் தோன்றியிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சான்று. இன்றைய அளவில் அது நிருபணம் செய்யப்பட்டும் விட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது