பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
===லாலா லஜுபது ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்===
 
இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, [[சைமன் குழு|சைமன் ஆணையக்குழுவை]] 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக [[லாலா லஜபத் ராய்|லாலா லஜபதி ராய்]] அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.{{sfn|Rana|2005a|p=[http://books.google.com/books?id=PEwJQ6_eTEUC&lpg=PA36 36]|ps=}}{{sfn|Vaidya|2001|ps=}} பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை{{sfn|Singh|Hooja|2007|p=[http://books.google.com/books?id=OAq4N60oopEC&pg=PA16 16]|ps=}} என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு{{sfn|Rana|2005a|p=[http://books.google.com/books?id=PEwJQ6_eTEUC&lpg=PA36 36]|ps=}} சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார்.{{sfn|Gupta|1997|ps=}} இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதாலாகதவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.{{sfn|Nayar|2000|p=[http://books.google.com/books?id=bG9lA6CrgQgC&pg=PA39 39]|ps=}}
 
மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் [[நேரு]] கூறியதாவது, {{quote|பகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார். சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.{{sfn|Mittal|Habib|1982|ps=}}}}
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது