சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 63:
== வாழ்க்கை வரலாறு ==
 
[[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தில்]] (பழைய [[சேலம்]] மாவட்டத்தின்) இல் [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி ஆவார்.<ref> {{cite web | last = மணியன் | first = தமிழருவி | title = ராஜாஜி என்ற ராஜரிஷி | publisher = தி தமிழ் இந்து | date = டிசம்பர் 25, 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/article5498814.ece | accessdate = டிசம்பர் 25, 2013 | archiveurl = http://tamil.thehindu.com/opinion/columns/ | archivedate = டிசம்பர் 25, 2013}}</ref>
ராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. [[1900]]இல் தமது [[வழக்கறிஞர்]] தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இயக்கம், [[ஒத்துழையாமை இயக்கம்]], [[வைக்கம் சத்தியாகிரகம்]] போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]]யின் [[உப்பு சத்தியாகிரகம்|தண்டி யாத்திரை]]யை ஒட்டி [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.[[ஐக்கிய ராஜ்ஜியம்|பிரித்தானியா]] [[ஜெர்மனி]]யுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் [[வெள்ளையனே வெளியேறு போராட்டம்|வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு]] எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் [[முகமது அலி ஜின்னா]]வுடனும் [[அகில இந்திய முஸ்லிம் லீக்]]குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் ''சி ஆர் பார்முலா'' என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், [[கல்வி]] மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவர்த்தி_இராசகோபாலாச்சாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது