"டி. எஸ். சொக்கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளன் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் சொக்கலிங்கம். தினமணி, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட, தான் பணியாற்றிய அத்தனை இதழ்களிலும் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.
 
சிறந்த இதழியலாளர் மட்டுமல்ல, சொக்கலிங்கம் சிறந்த படைப்பிலக்கியவாதியும்கூட. [[லியோ டால்ஸ்டாய்|லியோ டால்ஸ்டாயின்]] புகழ்பெற்ற நாவலான [[போரும் அமைதியும்]] என்ற நாவலை தமிழாக்கம் செய்தார். இது தவிர, சிறுகதை, நாவல், கவிதை என இலக்கியத்தின் அத்தனை துறைகளிலும் சிறப்பான பங்கினை நல்கியுள்ளார் சொக்கலிங்கம்.
 
சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்கு காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1893775" இருந்து மீள்விக்கப்பட்டது