"கர்ணன் (மகாபாரதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Arjuna and His Charioteer Krishna Confront Karna.jpg|thumb|400px|கர்ணன் (வலது) எதிர்கொள்பவன் அர்ஜூனன், இவர் பின்னர் குருக்ஷேத்ரா யுத்தத்தில் கர்ணனைக் கொல்பவர்.]]
 
'''கர்ணன்''' [[மகாபாரத|மகாபாரதம்|மகாபாரத]] காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய [[பாகல்பூர்]] மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். [[அருச்சுனன்|அர்சுனனை]] போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரனாகவீரராக நம்பப்படும் கர்ணன், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[பீஷ்மர்|பீஷ்மரினால்]] மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
 
அவர் [[சூரியன்]] (சூரியக் கடவுள்) மற்றும் [[குந்தி]]தேவி ஆகியோரின் மகனாவார். அவர் [[குந்தி|குந்திக்கும்]] [[பாண்டு]]விற்கும் திருமணம் நடைபெறும் முன்னரே, குந்திதேவிக்கு மகனாக பிறந்தார். துரியோதனனின் மிக நெருங்கிய நண்பரான கர்ணன் [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களை (தனது சகோதரர்களை) எதிர்த்து போரிட்டார். [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரில்]] இரண்டு நாள் [[கௌரவர்]] அணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் புரிந்து [[கடோற்கஜன்| கடோற்கஜனை]] இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால் கொன்றார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மற்றும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். அவரது இந்த வீரம் மற்றும் பெருந்தன்மைக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது.
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1900387" இருந்து மீள்விக்கப்பட்டது