பழவேற்காடு ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுட்டிகளைப் பற்றிய குறிப்புகளை இணைத்துள்ளேன்
கூடுதல் மொழிபெயர்ப்பு
வரிசை 32:
=== வரலாறு ===
கி.பி முதலாம் நூற்றாண்டில் Periplus of the Erthraean Sea என்கிற நூலை எழுதியவர் (அவர் பெயர் காலத்தால் மறக்கப்பட்டது) பழவேற்காட்டை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்று என்று குறிப்பிட்டு இருக்கிறார். <ref>ஓ.கே நம்பியார் எழுதிய “AN ILLUSTRATED MARITIME HISTORY OF INDIAN OCEAN” நூலில் இந்திய கிழக்கு கடற்கரை வரலாற்றைப் பற்றிய பகுதி.[http://web.archive.org/web/20090619060909/http://www.pfr2006.nic.in/MaritimeHistory3.htm]</ref>இரண்டாம் நூற்றாண்டில் Ptolomey தொகுத்த துறைமுகங்களின் பட்டியலில் பழவேற்காடும் இருக்கிறது. அதில் பழவேற்காடு Podouke emporion என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.<ref><nowiki>Francis, Peter (2002). Asia's Maritime Bead Trade: 300 B.C. to the Present. University of Hawaii Press. p. 33. ISBN 0-8248-2332-X.</nowiki>[http://books.google.com/books?id=zzZBdGQN_TIC&pg=PA33&lpg=PA33&dq=Podouke&source=bl&ots=eYXrREmghT&sig=eYAtj4jB8f8Qy5DQ-o-21Cm_wKc&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result]</ref>
 
பதிமூன்றாம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் பிறகு இந்தப் பகுதிக்கு நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்தனர். இந்த அரேபியர்கள் அப்போது வசித்த வீடுகளின் மிச்சங்களை இப்போதும் இந்தப் பகுதியில் காண முடியும். தற்போது அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் சிலர் இந்த குடியேற்றத்தின் வரலாற்றை நிரூபிக்க தங்களிடம் அரேபிய மொழியில் ஆவணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
 
கி.பி 1515-ம் ஆண்டு போர்த்துகீசியர்கள் இங்கு ஒரு கிருஸ்துவ வழிப்பாட்டு தலத்தினை உருவாக்கினார்கள். இன்று அந்த கட்டிடம் பாழடைந்திருக்கிறது. போர்த்துகீசியர்களுக்குப் பிறகு இங்கு டச்சு குடியமர்ந்தார்கள்.
 
17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டச்சு மக்கள் பயணித்த கப்பல்கள் சில பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தின் கரையோரம் கரைத் தட்டின. இதன் காரணமாக அக்கப்பல்களில் இருந்த டச்சு மக்கள் இங்கே தங்க நேரிட்டது. அவர்கள் 1606-ம் ஆண்டு முதல் 1690-ம் ஆண்டு வரை பழவேற்காட்டினைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு இப்பகுதியினை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். டச்சு காலத்தில் பழவேற்காடு பழைகட்டா என்றும் அழைக்கப்பட்டது. <ref>Azariah, Dr. Jayapaul (2007). "3. My Biography Paliacatte to Pulicat 1400 to 2007". ''Ch. 3, [[Pulicat Place Names Through History (PDF|Pulicat Place Names Through History]]'' [[Pulicat Place Names Through History (PDF|(PDF]]). Chennai, Tamil Nadu, India: CRENIEO. Retrieved 2008-11-21.</ref>இக்காலத்திலே ஜெல்டீரியா கோட்டை இங்குக் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டச்சு வணிகர்கள் மற்ற நாடுகளுடன் வணிகம் புரிவதற்கான தளமாக மாறியது.<ref>Azariah, Dr. Jayapaul (2007). "5. My Biography Paliacatte to Pulicat 1400 to 2007". ''[http://www.crenieo.org/books/PDF5.pdf Ch. 5, Dutch Trade Relations]'' [http://www.crenieo.org/books/PDF5.pdf (PDF)]. Chennai, Tamil Nadu, India: CRENIEO. Retrieved 2008-11-21.</ref> தற்போது டச்சு கால சான்றுகளாக பாழடைந்த டச்சு கோட்டையும் டச்சு தேவாலயமும், 1631-ம் ஆண்டு தொடங்கி 1655-ம் ஆண்டு வரை உருவான இருபத்தி இரண்டு கல்லறைகளும் வேறு சில இடிபாடுகளும் உள்ளன. இவை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் பராமரிப்பில் தற்போது உள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பழவேற்காடு_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது