நிலைத் திசையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
 
இதன் நீட்டிப்பாக நிலைத் திசையனின் உயர் வகைக்கெழுக்களைக் காணலாம். இடப்பெயர்ச்சிச் சார்பின் தோராயங்களை மேம்படுத்த இந்த உயர் வகைக்கெழுக்கள் குறித்த விவரங்கள் உதவும். மேலும் இடப்பெயர்ச்சி சார்பினை [[டெய்லர் தொடர்|ஒரு முடிவிலாத் தொடரின் கூட்டுத்தொகையாக]] எழுதுவதற்கும் இவை பயன்படுகின்றன. இடப்பெயர்ச்சிச் சார்பின் முடிவிலாத் தொடரின் கூட்டுத்தொகை வடிவம் பொறியலிலும் இயற்பியலிலும் பல நுட்பத் தீர்வுகளுக்கு உதவுகிறது.
 
== இடப்பெயர்ச்சிச் திசையனுடன் தொடர்பு==
வெளியிலமைந்த புள்ளிகளை ஒரு குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட தூரத்திற்குச் சீராக நகர்த்தும் செயலாக [[இடப்பெயர்ச்சி]]யை வரையறுக்கலாம். எனவே இடப்பெயர்ச்சித் திசையன்களின் கூட்டல், இந்த வகையான செயல்களின் தொகுப்பாகவும், திசையிலிப் பெருக்கல் மூலம் தூரங்களை அளவீடு செய்வதாகவும் அமையும். இதன்படி வெளியில் அமைந்த ஒரு புள்ளியின் நிலைத் திசையனை, தரப்பட்ட ஆதிப்புள்ளியை அப்புள்ளிக்கு நகர்த்தும் இடப்பெயர்ச்சித் திசையனாகிறது. நிலைத்திசையன்கள் வெளியின் ஆதிப்புள்ளியின் தேர்வையும், இடப்பெயர்ச்சித் திசையனானது தொடக்கப்புள்ளித் தேர்வையும் சார்ந்துள்ளன.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலைத்_திசையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது