சிறுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
= அறிமுகம் =
 
முடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் [[ஆல்லன் போ]], [[ஓ ஹென்றி]] இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு [[ஆண்டன் செக்காவ்]] தான் முன்னோடி என்பார்கள்.
 
தமிழில் சிறுகதைவடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. [[பாரதியார்|பாரதியாரின்]] ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள்.<ref>http://www.thoguppukal.in/2013/01/blog-post_19.html</ref> ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது [[வ.வெ.சு அய்யர்]] எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள [[குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)|குளத்தங்கரை அரசமரம்]] என்ற சிறுகதையாகும்.
 
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது [[மணிக்கொடி]] சிற்றிதழாகும். இது [[டி. எஸ். சொக்கலிங்கம்]], [[ஸ்டாலின் சீனிவாசன்]] ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக [[பி. எஸ். ராமையா]] வெளியிட்டார். இதில் [[புதுமைப்பித்தன்]], [[கு.ப.ராஜகோபாலன்]], [[ந.பிச்சமூர்த்தி]], [[மௌனி]] போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.
 
தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று [[க.நா.சுப்ரமணியம்]] [தெய்வஜனனம்.] [[சி. சு. செல்லப்பா]] [சரசாவின் பொம்மை], [[லா.ச.ராமாமிருதம்]] [பாற்கடல்], [[ஜெயகாந்தன்]] [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], [[சுந்தரராமசாமி]] [வாழ்வும் வசந்தமும்], [[கு அழகிரிசாமி]] [ராஜா வந்திருக்கிறார்], [[தி. ஜானகிராமன்]] [பாயசம்], [[கி. ராஜநாராயணன்]] [பேதை] [[சுஜாதா]] போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
 
= தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள் =
"https://ta.wikipedia.org/wiki/சிறுகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது