ஹளேபீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Halebidu BNC.jpg|thumb|300px|ஹளேபீடுவில் உள்ள போசாளேஸ்வரர் கோயில்]]
 
'''ஹளேபீடு''' (தமிழில் பழையவீடு) என்பது [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் [[போசளர் கட்டிடக்கலை|போசளர்களின் கட்டிடக்கலை]]க்குச் சான்றாக விளங்கியது. இது கர்நாடகத்தின் [[ஹாசன்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ''துவார சமுத்திரம்'' எனவும் ''தோர சமுத்திரம்'' என்றழைக்கப்பட்டது. மாலிக் கபூர் என்பவனால் இருமுறை தாக்கப்பட்டதால் இந்நகரம் கைவிடப்பட்டது. அதனால் இந்நகரத்துக்கு ''ஹளேபீடு'' அல்லது ''பழையவீடு'' என பின்னர் பெயர் பெற்றது. இங்கு உள்ள [[ஹோய்சாலேஸ்வரர் கோயில்|போசாளேஸ்வரர்]] மிகவும் புகழ் பெற்றது. இது [[போசளப் பேரரசு|போசாளர்]] கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
 
இது ஒரு இரட்டைக்கோவிலாகும். இவை இரண்டும் [[சிவன்]] கோவில்கள் ஆகையால் இவற்றின் முன்புறம் ஒரே கல்லால் ஆன [[நந்தி]]கள் உள்ளன. இவை ஏறத்தாழ 8 [[அடி]] உயரம் கொண்டவை. இக்கோவில்களின் பீடமானது [[விண்மீன்|நட்சத்திர]] வடிவில் உள்ளது. இக்கோவில்கள் இரண்டும் பண்டைக்காலத்தில் வேறு மன்னரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இவையிரண்டும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.<ref>[http://www.lonelywanderer.com/c321894.html நிழற்படங்கள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஹளேபீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது