ஆப்கானித்தானின் பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
கலைக்களஞ்சிய கட்டுரைக்கு அமைவற்ற உள்ளடக்கங்களை நீக்குதல்
வரிசை 18:
ஆப்கானிய அரசும், சர்வதேச உதவி வழங்குவோரும் அடிப்படைத் தேவைகள், உட்கட்டுமான அபிவிருத்தி, கல்வி, வீடு, மற்றும் பொருளாதார மீளமைப்பு என்பவற்றில் அதிகளவு அக்கறை காட்டிவருகின்றனர். நிதியியல் துறையைக் கட்டி யெழுப்புவதற்கான முயற்சிகள் இது வரை சிறப்பாகவே நடைபெற்றுவருகின்றன. பணமானது நாட்டினுள்ளேயும் வெளியேயும் உத்தியோக பூர்வ வங்கிகள் மூலம் பரிமாற்றக் கூடியதாக உள்ளது. 2003 க்குப்பின்னர் சுமார் பதின்நான்கு புதிய வங்கிகள் இங்கே திறக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, ஏஐபி வங்கி, காபூல் வங்கி, அசீசீ வங்கி என்பன அடங்கும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
தேசிய உதவியுடன் நடக்கும் சில தனியார் முதலீட்டுச் செயற்திட்டங்களும் நாட்டை நல்வழியில் இட்டுச்செல்கின்றன. இதில் கலாநிதி. ஹிசாம் என். அஷ்கோரி என்பவரால் நடத்தப்படும் விளக்குகளின் நகரம் அபிவிருத்தித் திட்டம் பிரபலமானதாகும். இதன் மூலம் காபூல் நகரம் வர்த்தக, வரலாற்று, கலாச்சார அபிவிருத்தியை அடையும் என்று எதிர்பார்க்கப்டுகி்ன்றது. இதன் மூலம் ஆப்கான் தேசிய நூதன சாலையும் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இப்படியான மாற்றங்கள் எதிர்காலத்தில் ஆப்கானிய மக்களுக்கு சிறப்பான வாழ்க்கை முறையைத் தேடித்தரும் என்பது நிஜமானாலும் தற்போது மக்கள் உணவுத் தட்டுப்பாடு, உடையின்மை, வீட்டுப்பிரைச்சனை, மருத்துவ வசதி போன்ற பிரைச்சனைகளால் அல்லல் படுகின்றனர். இவை யாவும் தொடர்ந்த யுத்தங்கள்மற்றும் அரசியல் ஸ்திரம் இன்மையால் ஏற்பட்ட பிரைச்சனைகளாகும். மத்திய அரசு சுங்க வரியினை முழுமையாக பெற முடிவதில்லை இதற்கு பழைய இராணுவத்தலைமைகளே காரணமாகும். மோசடி லஞ்சம் என்பன நாட்டில் புரையோடிப்போய் உள்ளது. அத்துடன் மத்திய அதிகாரம் இன்னமும் தெற்கு, தென்-மேற்குப் பகுதிகளில் நிலைபெறவில்லை.
 
இந்த வேளையில் ஆப்கானிஸ்தானுக்குச் ஆறுதல் தரும் செய்தி என்னவெனில் அது தற்போது உள்ள வறுமை போன்ற பிரைச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம் என்பதே. இதற்குக் காரணம், நாட்டில் பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்து கிடைப்பதே. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஆப்கானிய அமைச்சின் தகவல்ப்படி 15.6 ரில்லியன் கன அடி இயற்கை வாயு, 1.6 பில்லியன் எண்ணெய், 1,325 மில்லியன் பரல் இயற்கை வாயுத திரவம் என்பன உள்ளது. இது ஆப்கானிய மீள்கட்டுமானப் பணிகளில் ஒரு திருப்பு முனையாக அமையும். சக்தி மூலங்களின் ஏற்றுமதியானது நாட்டிற்கு பெருமளவு இலாபத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் உட்கட்டமப்பை நவீன மயப்படுத்த மற்றும் மக்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. வேறு சில மூலங்கள் நாட்டில் தங்கம், செம்பு, இரும்பு போன்ற கணிய வளங்கள் உள்ளதாகக் கூறுகின்றன.
 
[[பகுப்பு:ஆப்கானிஸ்தான்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தானின்_பொருளாதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது