பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:பரதநாட்டியப் பெண்.JPG|thumb|பரதநாட்டியப் பெண்]]
[[Image:Indian-dancer-nataraja.png|thumb|250x316px|right|பரத நாட்டியக் கலைஞர் ஒருவரின் நடனத் தோற்றம்]]
'''பரத நாட்டியம்''' [[தென்னிந்தியா]]வுக்குரிய, சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்குரிய]] [[நடனம்|நடனமாகும்]]. இது மிகத் தொன்மை வாய்ந்ததும், [[இந்தியா]]விலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - [[பாவம்]], ர - [[இராகம்|ராகம்]], த - [[தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05144in.htm | title=பரதநாட்டியம் | accessdate=அக்டோபர் 30, 2012 | author=ஞானாம்பிகை குலேந்திரன்}}</ref> பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் [[தேவதாசி முறை|தேவதாசிப் பெண்கள்]] ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
 
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவன்]] கூட, [[நடராஜர்]] வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் [[பார்வதி]] ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
 
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது '[[அடவு]]' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது '[[ஜதி]]' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. [[சிதம்பரம்]] ,மற்றும் [[மேலக்கடம்பூர்]] ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், [[நட்டுவாங்கம்]], மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. [[வீணை]], [[புல்லாங்குழல்]], [[வயலின்]], [[மிருதங்கம்]] ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் [[சலங்கை]]யும் அணிந்திருப்பார்.
 
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், [[வழுவூர் பி. இராமையா பிள்ளை]], [[திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை]], [[தனஞ்சயன்]], [[அடையார் லக்ஷ்மணன்]], [[கலாநிதி நாராயணன்]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
 
== மாதவியின் பதினொரு வகை ஆடல்கள் ==
ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்த மகளிர் மன்னர் சபையில் ஆடினர். சான்றாகக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "[[சிலப்பதிகாரம்]]"காப்பியம். இந் நூலில் ஆடல் நங்கையாக மாதவி சித்தரிக்கப்படுகிறாள். சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். இவள் நாட்டிய நன்னூல் கூறும் விதிகளுக்கு அமைய ஆடலை நன்கு பயின்றவள். ஆடலிலும், அழகிலும் சிறந்தவள். வலது கால் முன் வைத்து ஆடல் அரங்கு ஏறினாள். பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசையும் சேர்ந்த இசைக்கு ஏற்ப மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடினாள். அவள் ஆடிய ஆடல் வகைகளாக அல்லியம், குடக்கூத்து, மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், குடக்கூத்து, துடிக்கூத்து, பேடிக்கூத்து, கடையக்கூத்து, மரக்கால் கூத்து, பாவைக் கூத்து என்பனவற்றை சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
== கோயிலும் நாட்டியமும் ==
கோயில்களில் ஆடலும் பாடலும் இடம் பெறுவது தமிழர் சமய மரபு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜசோழன் தஞ்சையில் "ஸ்ரீராஜராஜேஸ்வரம்" என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இக்கோயிலில் ஆடலும் பாடலும் சிறப்பாக நிகழ ஏற்பாடு செய்தான்.
 
தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் மகளிர் ஆடல் தொண்டு செய்தனர். அவர்களில் சிறந்த நானூறு ஆடல் மகளிரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடற் பணி செய்ய வைத்தான். கோயில் சுற்று வீதியில் அவர்களுக்குத் தனித்தனி வீட்டைக் கொடுத்துப் பொருளையும் கொடுத்தான். அத்துடன் உணவையும் அளிக்க ஏற்பாடு செய்தான். இவர்களை முறையாகப் பயிற்றுவிக்க நாட்டிய ஆசான்கள் இருந்தனர். பக்க இசை பாடவும் கருவி இசை வழங்கவும் கலைஞர்கள் இருந்தனர். கோயில்களில் கலைத் தொண்டு சிறப்பாக வளர்ந்தது. இத்தகைய கோயில் பணி, காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெற மன்னன் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான். இதனால் தமிழகத்தில் நாட்டியப் பரம்பரை முறையாகத் தொடர்ந்தது. காலப் போக்கில் இக்கலை வடிவம் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர், பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்"/>
 
== ஆடல் முறைகள் ==
பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:
"https://ta.wikipedia.org/wiki/பரதநாட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது