பிரான்சிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Winnan Tirunallur பக்கம் பிரான்சிய மொழிபிரெஞ்சு மொழி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்திய...
No edit summary
வரிசை 95:
[[படிமம்:Map-Francophone World.png|thumb|250px|பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகள்]]
 
'''பிரான்சியபிரெஞ்சு மொழி''' ({{lang|fr|''le français''}} {{IPA-fr|lœ fʁ̥ɒ̃sɛ||Fr-le_français-fr-ouest.ogg}} அல்லது {{lang|fr|''la langue française''}} {{IPA-fr|la lɑ̃ɡ fʁɑ̃sɛz|}}) ஒரு ரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் ரோமண்டிப் பகுதி, பெல்ஜியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரென்சுவிக் (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், லூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர்.<ref name=CEFAN>{{cite web | title =L’aménagement linguistique dans le monde | work =CEFAN (Chaire pour le développement de la recherché sur la culture d’expression française en Amérique du Nord, Université Laval |language=French | publisher =Jacques Leclerc | url =http://www.axl.cefan.ulaval.ca/ | accessdate = May 19, 2013}}</ref> இவர்களில் பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர்.<ref name=2007_report>{{fr icon}} [http://www.amazon.fr/dp/2098821778 ''La Francophonie dans le monde 2006–2007''] published by the [[Organisation internationale de la Francophonie]]. [http://www.nathan.fr Nathan], [[Paris]], 2007.</ref> ஆபிரிக்காவில், காபொன் (80%),<ref name=2007_report /> மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரெஞ்சு மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும்,<ref name=CEFAN/> இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="andaman.org">[http://www.andaman.org/BOOK/reprints/weber/rep-weber.htm The World's 10 Most Influential Languages] ''Top Languages''. Retrieved 11 April 2011.</ref>
 
இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரெஞ்சு மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரெஞ்சு மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரெஞ்சு மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரெஞ்சு மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரெஞ்சு அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது