நிலப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9:
 
==நிலப் பயன்பாடும் சூழலும்==
நிலப் பயன்பாடும், [[நில மேலாண்மை]]ச் செயற்பாடுகளும் [[நீர்]], [[நிலம்]], ஊட்டப் பொருட்கள், [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள் போன்ற இயற்கை வளங்கள் மீது பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. நிலப் பயன்பாட்டுத் தகவல்களை, உவர்த்தன்மை, [[நீரின் தரம்]] என்பவை தொடர்பான இயற்கை வள மேலாண்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, [[காடழிப்பு]] அல்லது [[மண்ணரிப்பு]] ஏற்பட்ட இடங்களில் உள்ள [[நீர்நிலை]]களில் காணப்படும் நீரின் தரம், காடுகள் உள்ள பகுதியின் நீர்நிலைகளில் உள்ள நீரின் தரத்திலும் வேறுபட்டிருக்கும்.
 
1750 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலப் பயன்பாட்டினால் புவி மேற்பரப்பில் ஏற்பட்ட முக்கியமான தாக்கம் மிதவெப்பப் பகுதிகளில் நிகழ்ந்த காடழிப்பு எனலாம். அண்மைக் காலத்தில் நிலப்பயன்பாட்டினால் ஏற்பட்ட குறிப்பிடத் தக்க தாக்கங்களாக, [[நகர விரிவாக்கம்]], மண்ணரிப்பு, [[மண் தரமிழத்தல்]], [[நீர் உவராதல்]], [[பாலைவனமாதல்]] என்பவற்றைக் குறிப்பிடலாம். பெட்ரோலிய எரிபொருட்களின் பயன்பாடும், நிலப் பயன்பாட்டு மாற்றங்களுமே மிகமுக்கிய [[பசுங்குடில் வளிமம்|பசுங்குடில் வளிமமான]] [[காபனீரொட்சைட்டு|காபனீரொட்சைட்டின்]] முக்கியமான மனிதவழி மூலங்கள் ஆகும்.
 
[[பகுப்பு:நிலவியல்]]
[[பகுப்பு:நில மேலாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/நிலப்_பயன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது