சொற்பிறப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: cy:Geirdarddiad
No edit summary
வரிசை 1:
'''சொற்பிறப்பியல் (etymology)''' என்பது [[சொல்|சொற்களின்]] மூலம் பற்றிய படிப்பாகும். சில சொற்கள் பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை. பழைய எழுத்து மூலங்களிலிருந்தும், பிற [[மொழி|மொழிகளுடன்]] ஒப்பிடுவது மூலமும் சொற்பிறப்பியலாளர்கள், குறிப்பிட்ட சொற்கள் எப்பொழுது ஒரு மொழிக்கு அறிமுகமாயின, எந்த மூலத்திலிருந்து அறிமுகமாயின, எவ்வாறு அவற்றின் வடிவமும் பொருளும் மாற்றமடைந்தன போன்ற கோள்விகளுக்கு விடைகாண்பதன் மூலம், சொற்களின் வரலாற்றை மீளமைக்க முயல்கிறார்கள்.
 
நீண்டகால எழுத்து வரலாறு கொண்ட மொழிகளில், சொற்பிறப்பியலானது [[மொழிநூல்|மொழிநூலைத்]] (காலப்போக்கில், பண்பாட்டுக்குப் பண்பாடு சொற்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அறியும் ஆய்வு) துணையாகக் கொள்கிறது. நேரடியான தகவல்களைப் பெற முடியாத அளவுக்குப் பழைய மொழிகள் தொடர்பில், அவை பற்றிய தகவல்களை [[மீட்டுருவாக்கம்]] செய்வதற்குச் சொற்பிறப்பியலாளர், [[ஒப்பீட்டு மொழியியல்]] முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு முறையைப் பயன்படுத்தித் தொடர்புடைய மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் அம் மொழிகளின் பொது மூலமொழி பற்றியும் அதன் சொற் தொகுதி பற்றியும் ஊகித்து அறிய முடியும். இதன் மூலம் [[வேர்ச் சொல்|வேர்ச் சொற்கள்]] அறியப்படுவதுடன் அம் [[மொழிக் குடும்பம்|மொழிக் குடும்பத்தின்]] மூல மொழியிலிருந்து அச் சொற்களின் வரலாற்றையும் மீட்டுருவாக்க முடியும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சொற்பிறப்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது