பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 166:
சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம் என தமிழகத்தைச் சுற்றி அமைந்திருக்கும் 17 நிலங்கள் தாம் இவை என்கிறார் மயிலை நாதர். இதில் கொல்லம், தெலிங்கம், கன்னடம், துளுவம், குடகம், கொங்கணம் ஆகியவை தென்னிந்தியாவில் இருக்கின்ற பிற நிலங்கள் ஆகும். இவற்றில் முறையே தெலிங்கம், கன்னடம், துளுவம், குடகம், கொங்கணம் மொழிகள் என்பதை நாம் அறிவோம். இந்த மொழிகள் அதே பெயரால் அழைக்கப்பட்ட நிலங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நாடுகளை முறையே சோழர், பாண்டியர், போய்சளர், சாளுக்கியர், காக்காத்தியர் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருந்தனர்.
 
கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம் என்ற வடநாட்டு நிலங்களில் அதே காலக் கட்டத்தில் பாலர், காளாசூரியர், கிழக்கு கங்கர்கள், சண்டாளர்கள், சேனர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்திருந்தனர். அதனால், மயிலைநாதர் குறிப்பிடும் இந்த நிலங்கள் எல்லாம் மொழி பேசும் நிலங்கள் தான், அவை ஆட்சிப் பகுதிகளோ, நாடுகளோ கிடையாது. மகதம் என்பதும் ஒரு மொழியே, இன்றும் அது மககி என்ற பெயரில் பேசப்பட்டுத் தான் வருகின்றது. மொழி சார்ந்த இலக்கணத்திற்கு உரை எழுதிய நம் முன்னோர்கள், இதை எல்லாம் சிந்திக்காமலா எழுதியிருப்பர். இந்த நிலங்கள் எல்லாம் மொழிசார் நிலங்களாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர், ஏனெனில் மயிலைநாதர் உரை எழுதிய காலத்திலும் சரி அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் சரி, மேற்கூறிய நிலங்களை பல மன்னர்கள் பங்கிட்டு ஆட்சி செய்திருந்தனர். அவர்களின் பெயர்களும், ஆட்சி செய்த நாட்டின் பெயர்களும் வேறு வேறானவை. மரபுவழி மொழித் தாயகமாக அதன் பெயர்களையே நிலங்கள் என பவணந்தியார் குறித்ததாக மயிலைநாதர் சொல்லுகின்றார். அதனைத் தான் இன்றும் பல தமிழ் அறிஞர்கள் ஏற்றும் கொண்டுள்ளனர்.
 
அடுத்து அயல் நிலங்களைப் பற்றிப் பார்ப்போம். சிங்களம், சோனகம், சாவகம், சீனம், கடாரம் ஆகிய பிற நிலங்களையும் மயிலைநாதர் கூறுகின்றார். கிமு 12, 13-ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பாவில் ரோமப் பேரரசு ஆட்சி முடிவுற்று விட்டது. ரேமப் பேரரசின் கீழ் இருந்து வந்த கிரேக்கர்களின் வழித் தோன்றலாகிய பைசாந்திய பேரரசு மத்தியத் தரைக் கடல் பகுதியில் வாழ்ந்து வந்தது. அங்கு பல மொழிகள் பேசப்பட்டும் வந்தது. ஆனால், அரேபிய தீபகற்பத்தில் அரேபிய ஆட்சியாளும், எகிப்தில் பாத்திமை காலிபாக்களும் ஆட்சி செய்து வந்தனர். பாரசீகத்தில் செல்யூக சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். இக் காலக் கட்டத்தில் பைசாந்தியப் பேரரசு கிரேக்கம், துருக்கி, சிரியா, இராக் வரை மட்டுமே ஆட்சி செய்தனர். ஐரோப்பவின் பிற பாகங்களில் பல்வேறு அரசுகள் அப்போது தோன்றிவிட்டன. ஆக, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என அனைத்தையும் சோனகம் என சேர்த்து பவணந்தி முனிவர் சொல்லியிருப்பாரா என்பது ஐயமே. அவ்வாறு சேர்த்து சொல்லுகின்ற வழக்கம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமில்லை, மற்று எங்குமே காணப்பட்டதில்லை, அதற்கான சான்றுகளும் இல்லை. இருந்தால் தாருங்கள், அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.
வரிசை 174:
பவணந்தி முனிவர் வாழ்ந்த காலம் கிபி 12-ம் நூற்றாண்டு, அக்காலத்தில் ரோம பேரரசு தாங்கள் கூறிய ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யவில்லை. ரேம பேரரசின் வழிதோன்றலான பைசாந்திய அரசின் ஆட்சிப் பகுதிகள் கிரேக்கம், துருக்கி, மற்றும் மேற்குக் கரையில் மட்டுமே இருந்தது. மற்றைய பகுதிகளில் பல இஸ்லாமிய பேரரசுகள் தோன்றி ஆட்சி செய்தன. அரேபியம், பாரசீகம், எகிப்து ஆகியவற்றில் அரபு காலிபாக்கள் ஆட்சி செய்திருந்தனர். ஆக '''சோனகம் என்றால் அது ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு எல்லாவற்றையும் குறிக்கும் என நினைப்பது தவறு'''.
 
கடாரம், சாவகம் அகிய இரண்டும் வெவ்வேறு மொழிகள். கடாரம் என்பது bahasa melayu, சாவகம் என்பது bahasa java என்பதையும் குறிக்கின்றது. கெடா என்ற ஊரில் தமிழர்கள் கொண்ட தொடர்பினால், மலாயம் முழுவதையும் கடாரம் என்றழைக்கும் வழக்கம் தமிழர்களிடையே வந்தது. சாவகம் என்பது ஜாவாத் தீவைக் குறிப்பதாகும், அங்கு தனியே ஒரு மொழி இன்றளவும் இருந்து வருகின்றது. கடாரத்தை ஆட்சி செய்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சாவகத்தையும் ஆட்சி செய்திருந்தனர். ஒரு பொதுச் சொல்லால் பல மொழிகளை ஒருங்கிணைந்து குறிக்க நினைத்திருந்தால், மயிலைநாதர் கடாரம், சாவகம் என இரண்டு மொழிகளை தனித் தனியே குறிப்பிட்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. எல்லாவற்றையும் கடாரம் என்றோ, சாவகம் என்றோ குறிப்பிட்டு இருப்பாரே. ஆக, ஆட்சிப் பகுதியின் பெயரால் பல்வேறு மொழிகளை ஒன்றிணைத்துக் கூறியிருக்கலம் என்ற வாதம் பிழையானது. பல மொழிகள் இன்று பேசப்பட்டிருந்தாலும் பவணந்தி முனிவர் காலத்தில் எத்தனை மொழிகள் இருந்தன என்பதையும், அதில் எத்தனை மொழிகள் பெருமொழிகளாக இருந்தன என்பதையும், அதில் எத்தனை மொழி பேசுவோர் தமிழகம் வந்து சென்றிருந்தனர் என்பதையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கடாரம், சாவகம் ஆகியவற்றின் மொழிகளைத் தனித் தனியாகக் குறிப்பிட்ட மயிலைநாதர், கிரேக்கம், ரோமன், எகிப்து, அரபு, பாரசீக மொழிகளை எல்லாம் சோனகம் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கியிருந்தார் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லை. இந்தஒருவேளை விவாதக்தாங்கள் களத்தில்சொல்வதும் கண்டந்தெகூட என்றசரியாக சொல்லைப்இருக்கலாம், பற்றியதாகவேஅதற்கான தொடங்கப்பட்டுசான்றுகளோடு இருந்ததுஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி சமர்பித்துப் பாருங்கள், அதற்கானபல விளக்கங்களைதெளிவுகளைத் மேற்தமிழ் பத்திகளில்சமூகம் தந்திருந்தேன்பெறக் கூடும். தற்சமயம், தமிழ் அறிஞர்களும், எனது தமிழ் ஆசிரியர்களும் கற்பித்தவைகளிலிருந்தே எனக்கான பதிலை நான் தந்திருக்கின்றேன். புதியதொரு Conspiracy theory சார்ந்த விவாதங்களில் பங்கெடுக்க எனக்கு விருப்பமில்லை. திசைமாறிய விவாதங்களில் பங்கெடுக்க நேரமோ, ஆர்வமோ தற்சமயம் இல்லை என்பதால் இதில் விளக்கமான பதிலை வரலாற்று அறிஞர்களிடமே கேட்டுத் தெளிய வேண்டுகின்றேன். இந்த விவாதக் களத்தில் கண்டந்தெ என்ற சொல்லைப் பற்றியதாகவே தொடங்கப்பட்டு இருந்தது, அதற்கான விளக்கங்களை மேற் பத்திகளில் தந்திருந்தேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ! --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 06:48, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.