பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 177:
 
'''கடாரம் என்ற பெயரில் ஒரு மொழி இருக்கவே இல்லை.''' மலாய மொழியின் தொடக்கம் சுமாத்திராத் தீவிலும் அதனை அண்டிய தீவுகளிலுமே ஏற்பட்டது. மலாய மொழிக்கு கடாரம் என்ற பெயர் ஒரு காலத்திலும் வழங்கப்பட்டதன்று. சாவகத் தீவில் தனியொரு மொழியிருப்பதாகக் கூறுவது தவறானது. நானும் சாவகத் தீவிலேயே வசிக்கிறேன். சாவகத் தீவில் சாவக மொழி, சுண்டா மொழி, பாலி மொழி, மதுரா மொழி, பங்கா மொழி, படாங் மொழி, மூசி மொழி என்று பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ளன. இம்மொழிகள் ஒவ்வொன்றும் பல மில்லியன் கணக்காரனோராற் பேசப்படுகின்றன. அத்துடன் '''கடாரத்தை ஆட்சி செய்த மன்னரகள் நீங்கள் சொல்லும் காலப் பகுதியில் சாவகத்தை ஆளவில்லை.''' கடாரம் என்பதும் சாவகம் என்பதும் வெவ்வேறு பகுதிகள். அவற்றை வெறுமனே இரண்டு மொழிகளாகக் காட்ட நினைப்பது தவறு. அவ்வாறே சோனகம் என்ற சொல் நீங்கள் குறிப்படும் காலத்தில் அரபியரை மட்டும் குறிக்கப் பயன்பட்டதாகக் கூறுவது தவறு. அதற்கு ஆதாரமில்லை. அக்கால மேலை நாடுகளனைத்தும் சோனகம் என்றழைக்கப்பட்ட வெவ்வேறு பேரரசுகளின் கீழிருந்த நிலப் பகுதிகளே. எனவே, ஒரு நிலப் பரப்பின் பெயரால் தனியொரு மொழியைக் குறிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 07:34, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
'''வணக்கம் நண்பரே,''' சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும் என்பது எனது பேரவா. அதனால் இயன்றவரை சான்றுகளை முன் வைத்துப் பேசுவோம். ஊகங்களின் அடிப்படையில் பேசுவதை தவிர்க்கலாம்.
 
கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நீங்கள் சொல்லும் காலப் பகுதியில் சாவகத்தை ஆளவில்லை. முற்றிலும் சரியே ! கடாரம் தனித்தும், சாவகம் தனித்துமே ஆளப்பட்டது. அது மட்டுமின்றி இந்த இரு நாட்டு மொழிகளும் வெவ்வேறானவை என நன்னூல் காலத்தில் தமிழர்கள் அறிந்திருந்தனர். இந்த இரு நாட்டுக்குள்ளும் பல மொழிகள் இருப்பதும் உண்மையே, ஆனால் இன்றைய காலத்திலேயே தனிமொழிக்கும், கிளைமொழிக்கும், வட்டார வழக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்தறிவதில் பல இடர்பாடுகள் உள்ளன. அக் காலக் கட்டத்தில் அந்த நாட்டுக்கு எல்லாம் போய் தமிழர்கள் மொழி ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இந்த இரு நாடுகளின் பெருநகரத்து மக்கள் வணிக காரணங்களுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற, தமிழ்நாட்டு வணிகர்கள் அந்த நாடுகளின் பெருநகரங்களுக்கு போய் வந்த தொடர்புகளின் அடிப்படையில் தான் இந்த இரு நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொழிகளையும் (Official Language) தனிமொழிகளாக கருதியிருக்கின்றனர்.
 
மேற்கூறிய நன்னூல் பாடலுக்கான மயிலைநாதர் தரும் விளக்கத்தினை ஊன்றிப் படிக்கவும், அக் காலக் கட்டத்தில் மக்கள் அதிகம் அறிந்த நாடுகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்காசியா மட்டுமே. இதையே உலகம் எனக் கருதி வந்தனர். அப்படியிருக்க '''நன்னூலார் 17 நாடுகளை மட்டும் குறிக்க வேண்டிய தேவை என்ன?''' யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கணியன் பூங்குன்றனார் பாடியது போல, உலக மொழிகள் எலாம் என பவணனிதி முனிவர் பாடியிருக்கலாமே? பவணந்தி முனிவர் தமிழகத்திற்கு வந்து சென்ற மற்றும் இந்தியர்கள் அறிந்த நாட்டு மொழிகளின் சொற்களை நிச்சயம் ஆராய்ச்சி செய்திருக்கின்றார். தமிழ் மொழியின் ஒலிநயத்துக்கு மாற்றவல்ல மொழிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
 
தாங்கள் சொல்வது போல ஒரு பெருநிலத்தைக் குறிப்பிட்டு அதன் மொழிகள் எல்லாவற்றையும் அதற்குள் அடக்கியும் அவர் கூறியிருக்கலாம். கடாரம் என்றால் தென்கிழக்காசியா எனவும், சாவகம் என்றால் இந்தோனேசியாவின் தீவுகள் அனைத்தும், சீனம் என்றால் கிழக்காசிய நாடுகள் எனவும் நாம் பொருள் கொள்ளவும் வாய்ப்புண்டு.
 
ஆனால், கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான தென்கிழக்காசிய வரலாற்றைத் தேடிய போது, இன்றைய மலேசியா, சுமத்திர தீவுகளை மலாய் அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் பெருமொழியாக பழைய மலாய மொழியே இருந்திருக்கின்றது. சங்க காலம் முதலே மலாய நாட்டை கடாரம் என்றழைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இருந்து வந்திருக்கின்றது. இந்த கடாரம் என்ற பெயரை ஏன் தமிழர்கள் பயன்படுத்தினர் என்றால் தமிழ்நாட்டிலிருந்து சென்ற வணிகர்கள் முதன்முதலில் இறங்கிய இடம் கெடா என்று இன்றழைக்கப்படும் கடாரமே. அதனால் தான் மலாய நாடு முழுவதையும் கடாரம் என்றழைத்தனர். சோழர்கள் கடாரம் கொண்டான் என்ற பட்டத்தை பெற்றதும், வெறும் கெடா என்ற ஊரைக் கைப்பற்றியதாலல்ல, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஆண்ட மலாய தீபகற்பம், சுமத்திர உள்ளடங்கிய முழு கடார நாட்டையும் கைப்பற்றியதால் தான்.
 
அதே, கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் ஜாவாத் தீவினையும், போர்னியோ உட்பட சில தீவுப் பகுதிகளையும் சாவக மன்னர்கள் ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். இவர்களின் பெருமொழியாக பழைய சாவக மொழியை ஆட்சிமொழியாக கொண்டிருந்தனர். சயிலேந்திர மன்னர்கள் இந்த மொழியில் கல்வெட்டுக்களையும் தந்தருளியுள்ளனர். மரபுவழி தாயகமாக சாவகம் தனியொரு அடையாளமும் கொண்டிருந்தது.
 
அதே, கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில், சாவக மன்னர்களோ, கடார மன்னர்களோ இன்றைய தாய்லாந்து, பர்மா, கம்போடியா பகுதிகளை தொடர்ச்சியாக ஆளவில்லை. அங்கே தனித் தனி அரசுகள் இருந்தன. தாய்லாந்து, கம்போடியா, வியட்நாமை உள்ளடிக்க பகுதிகளில் கெமர் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் பெருமொழியாக இருந்தது பழைய கெமர் மொழியாகும். இதைத் தமிழர்கள் கம்போசம் எனவும் அழைத்திருக்கின்றனர். ஆனால், கம்போச மொழியை மயிலைநாதர் சொல்லவில்லை, கடாரம் என்பதற்குள் கம்போசத்தை உள்ளடக்கி சொல்லியிருந்தார் என கருதும் வாதம் பிழையானது. '''கடாரம் என்ற சொல்லில் கம்போசத்தை உள்ளடக்கியிருப்பின், ஏன் அதே சொல்லில் சாவகத்தையும் உள்ளடக்கிச் சொல்லியிருக்கக் கூடாது.''' தனித் தனியே சொல்ல வேண்டிய தேவை இல்லையே. வெறுமனே கீழை மொழிகள் எலாம் எனவும் கூறியிருக்கலாமே?!
 
அதே, கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் அரேபிய காலிபாக்கள், மற்றும் சுல்தான்களின் ஆட்சியில் தான் மத்திய கிழக்கும், வட ஆப்பிரிக்காவும் இருந்தது. ஆனால் தாங்கள் சொல்கின்றது போல ஐரோப்பா அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. சுல்தான்களின் ஆட்சியில் அரபு மட்டுமே பெருமொழியாகவும் இருந்து வந்திருக்கின்றது. அதே சமயம், அக் காலக் கட்டத்தில் '''மேற்கிலிருந்து வந்தோரை எல்லாம் மிலேச்சர் என்றே இந்தியர்கள் அழைத்து வந்தனர்.''' ‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. இது மேற்கிலிருந்து வந்தோருக்கான பொதுச் சொல்.
 
ஆனால், யவனர் என்ற சொல்லானது, கிரேக்க நாட்டிலிருந்த Ionic Greek என்ற மக்களைக் குறித்த சொல்லாகும். இவர்களே அதிகளவிலான வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பலரும் சங்க காலம் தொட்டே தமிழகம் வந்து சென்றிருக்கின்றனர். இவர்களையே முதலில் யவனர் என தமிழர்கள் அழைத்திருந்தனர். அதே சமயம், மத்திய கிழக்கிலிருந்து வந்த யூதப் பெருமக்களை அஞ்சுவண்ணம் என தமிழர்கள் அழைத்திருந்தனர். கிபி 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தரிசப்பள்ளி செப்பேடுகள் இதில் முக்கியமான ஓர் ஆவணமாகும். அந்த செப்பேடுகளில் தமிழ் மன்னர்கள் அரபு படையெடுப்பினால் பாதிக்கப்பட்டு மத்தியக் கிழக்கிலிருந்து அகதிகளாக வந்த அந்நிய மக்களுக்கு நிலங்களை வழங்கி குடியேற அனுமதித்துள்ளனர். இதில் மூன்று மொழிகளில் அந்நிய மக்கள் ஒப்பமிட்டுள்ளனர். எபிரேயம், பகலாவி, மற்றும் அரபு மொழி ஆகும். இவ்வாறு மத்தியக் கிழக்கிலிருந்து பல்வேறு மொழி பேசுவோரும், பல்வேறு மதத்தினரும் தமிழகம் வந்து சென்றும், குடியேறியும் உள்ளனர். அவர்களுக்கு பல தனிப் பெயர்களும், அவர்களின் மொழிகளுக்கு தனிப் பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சோனகம் என்ற ஒற்றைச் சொல்லில் மேற்கு மக்கள் அனைவரையும் அழைத்ததாக சொல்லுவது நம்பும்படியாக இல்லை. சோனகம் என்ற சொல்லே முஸ்லிம் மக்களை குறிக்கவே கிபி 9-ஆம் நூற்றாண்டின் பின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
 
1910-இல் பழைய இந்திய இலக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை ஆ.சிங்கார வேலு முதலியார் வெளியிட்டார். இதில் பழைய தேசங்களாக 56 தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:
 
அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்நாடம், காசம், காசுமீரம், காந்தாரம், காம்போஜம், கிராமம், குருகு குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம்.
 
இதில் தெளிவாகவே யவனம், சோனகம் ஆகிய இரண்டையும் தனித் தனியாக குறித்துள்ளார். ஆக, யவனம் தான் சோனகம், சோனகம் தான் ரோம சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் தான் ஐரோப்பா முழுமையும் என்ற வாதங்கள் எல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது? அது மட்டுமின்றி பண்டைய காலத்தில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு 56 நாடுகளை தெரிந்திருக்கின்றது. ஆனால், இதில் 17 நாடுகளை மட்டுமே நன்னூல் சொல்கின்றது. அந்த 17 நாடுகளில் பல நாடுகளின் பெயராலே தனிமொழி இன்றளவும் இருந்து வருகின்றது. ஆக, அந்த நிலங்கள் மொழிவழிப் பெருநிலம், மொழிவழித் தாயக நிலங்களாகவே நாம் கருத இடமுண்டு. அதே சமயம் யவனம் உட்பட சில நாட்டு மொழிகளை திசைச் சொல்லாக ஏற்பதை நன்னூலார் விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது. இது தமிழின் சொல்லமைதிக்கு அவை பொருத்தமுடையதாய் இல்லை எனக் கருதியிருக்கலாம். இன்றளவும் கூட ஐரோப்பிய மொழிச் சொற்களை தமிழிற்கு மாற்றுவது பெருந்தடையாக இருக்கின்றது. அதனால் தான் நாம் பல சமயம் ஆங்கிலச் சொற்களை தமிழிற்கு கடன் வாங்குவதைத் தவிர்த்து தனித் தமிழ் சொற்களை உருவாக்கிக் கொண்டும் வருகின்றோம்.
 
ஆனால் சோனகம் என்றால் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என அனைத்தையும் குறித்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்? தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருக்கின்றேன். பவணந்தி முனிவர் காலத்தில் ஐரோப்பா முழுவதும் சோனகம் என அழைக்கப்பட்டதற்கான சான்று? --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 16:13, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.