பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 198:
1910-இல் பழைய இந்திய இலக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை ஆ.சிங்கார வேலு முதலியார் வெளியிட்டார். இதில் பழைய தேசங்களாக 56 தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:
 
''அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்நாடம், காசம், காசுமீரம், காந்தாரம், காம்போஜம், கிராமம், குருகு குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம்.''
 
இதில் தெளிவாகவே '''யவனம், சோனகம் ஆகிய இரண்டையும் தனித் தனியாக குறித்துள்ளார்.''' ஆக, யவனம் தான் சோனகம், சோனகம் தான் ரோம சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் தான் ஐரோப்பா முழுமையும் என்ற வாதங்கள் எல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது? அது மட்டுமின்றி பண்டைய காலத்தில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு 56 நாடுகளை தெரிந்திருக்கின்றது. ஆனால், இதில் 17 நாடுகளை மட்டுமே நன்னூல் சொல்கின்றது. அந்த 17 நாடுகளில் பல நாடுகளின் பெயராலே தனிமொழி இன்றளவும் இருந்து வருகின்றது. ஆக, அந்த நிலங்கள் மொழிவழிப் பெருநிலம், மொழிவழித் தாயக நிலங்களாகவே நாம் கருத இடமுண்டு. அதே சமயம் யவனம் உட்பட சில நாட்டு மொழிகளை திசைச் சொல்லாக ஏற்பதை நன்னூலார் விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது. இது தமிழின் சொல்லமைதிக்கு அவை பொருத்தமுடையதாய் இல்லை எனக் கருதியிருக்கலாம். இன்றளவும் கூட ஐரோப்பிய மொழிச் சொற்களை தமிழிற்கு மாற்றுவது பெருந்தடையாக இருக்கின்றது. அதனால் தான் நாம் பல சமயம் ஆங்கிலச் சொற்களை தமிழிற்கு கடன் வாங்குவதைத் தவிர்த்து தனித் தமிழ் சொற்களை உருவாக்கிக் கொண்டும் வருகின்றோம்.
 
ஆனால் சோனகம் என்றால் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என அனைத்தையும் குறித்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்? தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருக்கின்றேன். பவணந்தி முனிவர் காலத்தில் ஐரோப்பா முழுவதும் சோனகம் என அழைக்கப்பட்டதற்கான சான்று? --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 16:13, 5 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.