பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 206:
==சோனகம்==
ஓரிடத்தில் சோனகம் என்பதும் யவனம் என்பதிலிருந்து மருவியது என்று கூறும் நீங்கள் மற்றோரிடத்தில் இரண்டும் வெவ்வேறானவை என்கிறீர்கள். அடுத்தது மேற்குறித்த பன்னிரு நிலங்களும் இவை தாமென்று நன்னூலார் குறித்ததில்லை என்கிறீர்கள். மேலும் அபிதான சிந்தாமணி என்பது வெறும் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் ஏராளமாகத் தொகுத்து வைத்துள்ள ஒரு புத்தகம். அது ஏற்கப்பட முடியாது. எவ்வாறிருப்பினும் [http://sailanmuslim.com/news/wp-content/uploads/the-origins-and-affinities-of-the-sri-lankan-moors.pdf சோனகம் என்பதன் மூலம் அக்கால ஐரோப்பாவும் வட ஆபிரிக்காவும் மத்திய ஆசியாவும் மத்திய கிழக்கும் குறிக்கப்பட்டமைக்கான சான்று இதோ]. This becomes especially significant in view of the findings by Rajendrala’la Mitra, based largely on literary evidence, showing that originally the '''Yavana of the Sanskrit writers was the name of a country and of its people to the west of Kandahar (Arabia, Persia, Medea or Assyria) subsequently becoming the appellation for all casteless races to the west of the Indus, including the Arabs and the Asiatic Greeks''' என்று குறிக்கிறார் மேற்படி ஆய்வாளர். நான் முதலிலேயே குறிப்பிட்டது போன்று சோனகம் அல்லது யவனம் என்ற சொல் வெவ்வேறு எழுத்தாளர்களால் கிரேக்கர், உரோமர், அரபியர், பாரசீகர், அசீரியர் எனப் பல்வேறு தரப்பினரையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 02:37, 6 செப்டம்பர் 2015 (UTC)
 
:: '''வணக்கம்''', யவனர் என்ற சொல் தொடக்கத்தில் இயோனிக கிரேக்கர்களைக் குறித்தது என்பதும், பின்னர் அனைத்து கிரேக்கர்களையும், பின்னர் அரபுகளையும் குறித்தது. இயோனா, யவனா அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றது என்பதும் ஏற்கத் தக்கதே. யவனம் தான் சோனகம் ஆனது என பல எழுத்தாளர்களும் கருதுகின்றனர். இதுவும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்றே.
 
யவனம் என்ற சொல்லிலிருந்து சோனகம் வந்திருக்கலாம். ஆனால், சோனகம் என்ற சொல் கிரேக்கர்களைக் குறிக்கவில்லை, அது மற்ற ஐரோப்பியர்களையும் குறிக்கவில்லை. இந்தியர் என்ற சொல்லிருந்து செவ்விந்தியர் என்ற சொல் வந்திருந்தாலும், செவ்விந்தியர் என்ற சொல் இந்தியரைக் குறிக்காது, அதில் இந்தியர் என்ற பதம் இருந்தாலும் கூட.
 
சோனகர் என்ற சொல் அரபுகளையே குறித்திருக்கின்றது என்பதற்கான சான்றுகளே மிக அதிகம். Frontiers of Embedded Muslim Communities in India என்ற நூலில் விநோத் கே. ஜெய்ரத் அவர்கள் கூறுகின்றார், " Sonkan or the native of Sonka, meaning Arabia ". History of People and Their Environs: Essays in Honour of பேராசிரியர் சந்திரபாபு அவர்கள் கூறுகின்றார், "Sonka this term also seem to have denoted collectively the West Asian traders, the Arabs, the Jews, the Parsees, but the Arab Muslims figured more prominently" "Sonakar was the term used for "Muslim" in Tamil". Damilica என்ற நூலில் in the Chola period called them Sonaka, Sonakar in Tamil means Muslim எனச் சொல்லப்பட்டுள்ளது. Maritime History of the Coromandel Muslims என்ற நூலில் Sonakam in Tamil stands for Arabia எனச் சொல்லப்பட்டுள்ளது. The evolution of an ethnic identity: the Tamils in Sri Lanka என்ற நூலில் ther term Sonaka ... also seems to have denoted collectively the West Asian traders என்கிறார். பண்டைய இலக்கியங்களை தீவிரமாக ஆராய்ந்து அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை எழுதிய ஆ.சிங்கார வேலு முதலியார் ஏன் யவனம், சோனகம் என இரண்டையும் தனித் தனியாக குறிக்கின்றார்
 
தமிழகம், கேரளம், இலங்கை ஆகியவற்றில் மத்தியக் கிழக்கிலிருந்து குடியேறிய யூதர்கள், அரபுகள், அசிரியர்கள் வாழ்ந்திருந்த போதும், சோனகர் என்ற சொல்லானது முஸ்லிம்களை மட்டுமே இன்றளவும் குறிக்கின்றது. மற்ற சமூகத்தவரை சோனகர் என குறிக்கவில்லை. சோனகரது ஆரம்பம் அரேபியாவிலிருந்துதான் தொடங்குகின்றது என ஐ.எல்.எம் அப்துல் அஜீஸ் குறிப்பிடுகின்றார்.
 
யவனர் என்றால் கிரேக்கர் மற்றுமுள்ள ஐரோப்பியர் என பொருள் கொள்ளுகின்ற படி தமிழ் சமூகம் எழுதி வந்திருக்கின்றது. ஆனால், மத்தியக் கிழக்கில் அரபுகளின் எழுச்சியும், இஸ்லாமிய மதத்தின் தோற்றத்தின் பின்னர் யவனம் என்ற சொல் கைவிடப்பட்டுவிட்டது. பின்னர், சோனகம் என்ற சொல் பயன்பாட்டில் வந்தது. இந்த சோனகம் என்ற சொல்லை அரபு இஸ்லாமியர்களையே தமிழ் சமூகம் என்றும், இன்றும் குறித்து வந்திருக்கின்றது. மற்ற மேற்கத்தியவர்களை நஸ்ரானிகள், கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள், மிலேச்சர்கள் என்ற சொல்லால் தமிழ் சமூகம் குறித்துள்ளது. சோனகம் என்ற சொல்லே மேற்கத்தயவர் என்று தமிழ் சமூகம் கருதியிருந்தால் ஏனைய சொற்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தேவையே ஏற்பட்டிருக்காது. ஆக, சோனகம் என்பது அரேபியம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அல்லது சோனகம் என்றாலே மேற்கத்தையவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் ஏதும் உண்டா? இருந்தால் அறியத் தாருங்கள் நண்பரே. அறிய ஆவலாகவே உள்ளேன். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 04:07, 6 செப்டம்பர் 2015 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.