ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎தோற்றம்: *திருத்தம்*
வரிசை 7:
 
== தோற்றம் ==
ஊற்றுக்களில் இருந்தோ, [[ஏரி]]களில் இருந்தோ, [[பனியாறு]]கள் உருவதன்உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் [[கிளையாறு]]கள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய [[பள்ளத்தாக்கு]]களில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும்.
 
ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வரண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. [[தொழிற்சாலை]]களுக்கும், [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனத்]] தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையுமுன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி [[வடிநிலம்]] அல்லது [[நீரேந்து பகுதி]] எனப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது