ஒப்பீட்டு மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஒப்பீட்டு மொழியியல்''' என்பது, [[வரலாற்று மொழியியல்|வரலாற்று மொழியியல...
 
No edit summary
வரிசை 5:
==வழிமுறைகள்==
 
ஒப்பீட்டு முறை என்னும் உத்தி மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் [[ஒலியியல் முறைமை]]கள், [[உருபனியல் முறைமை]]கள், [[தொடரியல்]], சொற் தொகுதி ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பீட்டு மொழியியலின் அடிப்படை உத்தியாகும். கோட்பாட்டளவில் தொடர்புள்ள இரண்டு மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் தர்க்கரீதியான முறையில் விளக்கம் தரக்கூடிய வகையில் அமைந்திருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, ஒலியியல் மற்றும் உருபனியல் முறைமைகள் கூடிய ஒழுங்கமைவு கொண்டவையாக இருத்தல் வேண்டும். நடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் எடுகோள்கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த [[இந்திய-ஐரோப்பிய மொழி]]களிலுமே காணப்படாத [[குரல்வளையொலி]]கள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற [[சோசுரே]] (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் [[ஹிட்டைட் மொழி]]யின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே [[மெய்யொலி]] எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பீட்டு_மொழியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது