இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 115:
ஆயினும் ஒரே சொல் இரு வேறு மொழிகளில் இரு வேறு பொருள் கொடுப்பதுண்டு. எடுத்துக் காட்டாக, இந்தோனேசிய மொழியில் பீரு என்றால் நீல நிறம். மதுரா மொழியில் பீரு என்றால் பச்சை நிறம்.
 
இந்தோனேசியாவில் சொற்றொடர்களைச் சுருக்கி மொழியும் வழக்கம் காணப்படுகிறது. பெயர்களையும் அவ்வாறே சுருக்கி மொழிவதுண்டு. எடுத்துக் காட்டாக, ''நாஸி கோரெங்'' (nasi goreng) என்பதை ''நஸ்கோர்'' (nasgor) என்று மொழிவதும் சுகர்னோ ஹத்தா (Soekarno-Hatta) என்பதை சுத்தா (Soetta) என்றும் மொழிவதும் சர்வ சாதாரணம். ஆயினும் இத்தகைய சுருக்கல் இடத்துக்கிடம் வேறுபட்ட விதத்தில் புரிந்து கொள்ளப்படுவதுமுண்டு. எடுத்துக் காட்டாக, ஜகார்த்தாவில் பனிக்கட்டியிட்ட இனிப்பான தேனீர் என்பதை ''எஸ் தேஹ் மானிஸ்'' (es teh manis) என்று கூறப்படுகிறது. இதுவே மேடானில் குளிர்ந்த இனிப்பான தேனீர் என்றவாறு, தேஹ் மானிஸ் டிஙின் (teh manis dingin) என்பதைச் சுருக்கி ''தேஹ் மாண்டி'' என்றோ (teh mandi) வெறுமனே ''மாண்டி'' (mandi) என்றோ கூறப்படுகிறது. உண்மையிலேயே மாண்டி என்றால் குளித்தல் என்று பொருள். இத்தகைய சொற் பயன்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு.
 
[[பகுப்பு:மலாய-பொலினீசிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது