இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
முற்காலத்தில் V எனும் எழுத்து தமிழின் வகரத்தைப் போன்றே மொழியப்பட்டு வந்துள்ளமை பண்டைய மலாய ஆக்கங்களிலிருந்து தெளிவாகின்றது. பண்டைய கல்வெட்டுக்கள், சுவடிகள் போன்றவற்றை வாசிக்கும் போது இம்முறையே பின்பற்றப்படுகிறது. ஆயினும் வகரம் தற்காலத்தில் W எனும் எழுத்தால் எழுதப்படுகின்ற அதே வேளை, V எனும் எழுத்து F எனும் எழுத்தின் ஓசையை நெருங்கி ஒலிக்கிறது.
 
E எனும் எழுத்து வருமிடங்களில் எகரமாக மொழியப்படுவதும் அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைப்பட்டதாக மொழியப்படுவதும் என இரு விதங்களுண்டு. தமிழில் அகரமாக எழுதப்படும் அத்தகைய இடங்கள் இம்மொழியை அறியாத தமிழர்களுக்கு விளங்கிக் கொள்வதில் குழப்பத்தையேற்படுத்தலாம். Nasi gudeg என்பதை ''நாஸி குடெக்'' என்று கூறுவதில்லை. அது ''நாஸி குடக்'' எனப்படுகிறது. Emas, enam, enak போன்ற சொற்களில் உள்ள E என்பது அகரத்துக்கும் எகரத்துக்கும் அஃகானுக்கும் ஒரு முக்கோணமிட்டு நடுவில் ஒலிப்பது போன்று தோன்றும். இதைப் பழக்கத்திலேயே அறிந்து கொள்ள வேண்டும். வேறு சில சொற்களின் ஒலியமைப்பைப் பழக்கத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, tahu என்ற சொல்லில் உள்ள h என்ற எழுத்தைக் குறுக்கி ''தாஉ'' என்பது போன்று மொழிந்தால் அறி/அறிவேன் என்றவாறு பொருளேற்படினும், அதிலுள்ள h எழுத்தை அழுத்தி ''தாகு'' என்று மொழிந்தால் அது ஒரு உணவுப் பண்டத்தின் பெயராகும்<ref>http://www.indonesianpod101.com/indonesian-pronunciation/</ref>.
 
இந்தோனேசிய மொழியில் சாவக மொழியைப் போன்றே பெரும்பாலான சொற்களின் இறுதியில் வரும் K எனும் எழுத்து மொழியப்படாதிருப்பதும் சில வேளைகளில் கால் மாத்திரையளவு மொழியப்படுவதுமுண்டு. அத்தகைய சொற்கள் ஆய்த எழுத்து இறுதியில் வருவது போன்றே பெரும்பாலும் மொழியப்படுகின்றன<ref>http://gimonca.com/sejarah/pronounce.html</ref>. எடுத்துக் காட்டாக batuk (பத்துஃ), demak (டெமாஃ), perak (பெராஃ) போன்ற சொற்களைக் குறிக்கலாம். பத்துக் அல்லது பத்துகு என்றவாறோ, டெமாக் அல்லது டெமாகு அல்லது தெமாகு என்றவாறோ, பெராக், பெராகு, பேராக் என்றவாறோ மொழியும் போது இத்தகைய சொற்களின் பொருள் மாறுபடலாம். இவ்வாறான ஒலிபெயர்ப்பு “வட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” என்ற கதையைப் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது